முன்னாள் அமைச்சர் ஒருவரை, தன் கோபாலபுரம் வீட்டிற்கு வர வேண்டாம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தடை விதித்திருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க., முதல்வர் வேட்பாளராக, ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தால், கட்டாயம் தி.மு.க., ஆட்சி அமைந்திருக்கும் என்றும், முதல்வர் வேட்பாளராக, 92 வயது கருணாநிதியை அறி வித்ததை, இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளா ததால், தோல்வி ஏற்பட்டுள்ளது என்ற தகவலை, கட்சியினர் மத்தியில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக செயல்படு வதற்கு, கருணாநிதி விரும்பினார். ஆனால், அந்த பதவியை ஸ்டாலின் விரும்பி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து,
ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் அமைப்புசெயலர் ஆலந்துார் பாரதி, செய்தி
தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை தேர்வு செய்து, கருணாநிதி
அறிவித்தார். ஸ்டாலின் பரிந் துரை செய்த தொழிற்சங்க நிர்வாகியை, கருணாநிதி நிராகரித்தார். இந்த சம்பவங்களால், இருவர் இடையே பனிப்போர் நிலவுகிறது.
உள்ளாட்சி தேர்தலில், தன் கட்டுப்பாட்டில் கட்சியை வழிநடத்த, கருணாநிதி விரும்புகிறார். 'கட்சியை சீரமைக்கவும், வலிமைப்படுத்தவும் தானும், பொதுச் செயலர் அன்பழகனும் இணைந்து பணி யாற்றுவோம்' என கருணாநிதி, கட்சியினரிடம் சொல்லி வருகிறார்.
சட்டசபை தேர்தலில் உள்ளடி வேலையில் ஈடுபட்ட ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கும் முனைப்பில் கருணாநிதி உள்ளார். இதற் காக, மாவட்டந்தோறும் கட்சி சார்பில் ஆய்வுக் குழுவை அனுப்பிஉள்ளார் கருணாநிதி.
இந்த விசாரணையெல் லாம் நடந்து முடிந்ததும், அதிரடியாக
களை யெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வும் அவர் முடிவெடுத்து உள்ளார்.
சமீபத்தில் அறிவாலயத்தில், கருணாநிதி தலைமை யில் நடந்த, 'ரோமாபுரி பாண்டியன்' தொடர் பாராட்டு
விழா நிகழ்ச்சியை, சென்னை யைச் சேர்ந்த மாவட்ட செயலர்கள் மற்றும் ஸ்டாலின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர்.
இதனால், ஸ்டாலின் மீது கோபமாக இருக்கும் கருணாநிதி, ஸ்டாலின் பின்னணியாக இருந்து செயல்படும், முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது கடும் கோபம் அடைந்துள்ளார்.
அவர் தான், ஸ்டாலினை துாண்டி விட்டு, பிரச் னைகளை உருவாக்குகிறார் என்பதால், அந்த முன்னாள் அமைச்சரை, கோபாலபுரத் தில் உள்ள தன் இல்லத்துக்கு வரக்கூடாது என, உத்தரவு போட்டுள்ளதாக தி.மு.க., வட்டாரங் கள் கூறின .
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (53)
Reply
Reply
Reply