சுப்பிரமணியன் சாமிக்கு வாய்ப்பூட்டு போட ஆலோசனை

Added : ஜூன் 26, 2016
Share
Advertisement
புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நிதித் துறை அதிகாரிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியைக் கட்டுப்படுத்த, பா.ஜ., ஆலோசனை நடத்தி வருகிறது. குற்றச்சாட்டு : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனைத் தொடர்ந்து, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீது, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் குற்றச்

புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நிதித் துறை அதிகாரிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியைக் கட்டுப்படுத்த, பா.ஜ., ஆலோசனை நடத்தி வருகிறது.
குற்றச்சாட்டு : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனைத் தொடர்ந்து, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீது, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடும் குற்றச் சாட்டுக்களை கூறினார். அதைத் தொடர்ந்து, சாமியை கண்டிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ''என்னைக் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி கூறுகின்றனர். நான் சுயக்கட்டுப்பாட்டுடன் தான் உள்ளேன்; இல்லாவிட்டால் ரத்தக்களறி ஏற்பட்டு இருக்கும்,'' என சாமி, 'டுவிட்டர்' சமூக தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆதரிப்பதில்லை : இந்தக் கருத்து, பா.ஜ., தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவு, சாமிக்கு உள்ளது. அதே நேரத்தில், அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஆதரிப்பதில்லை. அதைத் தொடர்ந்து, சாமி மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, பா.ஜ., தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இந்த நடவடிக்கை உடனடியாக இருக்காது என்றும், அடுத்த முறை அவர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினால், நடவடிக்கை பாயும் என, பா.ஜ., மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X