வரலாறு மன்னிக்காது!

Added : ஜூன் 26, 2016
Share
Advertisement
கட்சியை விட்டு விலகிய, சுவாமி பிரசாத் மவுரியாவை, மீண்டும் சேர்த்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை; அவர், சுயநலவாதி. கட்சிக்கும் சரி, சமூகத்துக்கும் சரி; அவரால் எந்த பலனும் இல்லை. நம்பிக்கை துரோகிகளை, வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. அவர் விலகினாலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவது இல்லை.மாயாவதி, தலைவர் - பகுஜன் சமாஜ்மாற்றான் தாய் செயல்பாடு!மத்தியில்

கட்சியை விட்டு விலகிய, சுவாமி பிரசாத் மவுரியாவை, மீண்டும் சேர்த்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை; அவர், சுயநலவாதி. கட்சிக்கும் சரி, சமூகத்துக்கும் சரி; அவரால் எந்த பலனும் இல்லை. நம்பிக்கை துரோகிகளை, வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. அவர் விலகினாலும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவது இல்லை.
மாயாவதி, தலைவர் - பகுஜன் சமாஜ்
மாற்றான் தாய் செயல்பாடு!
மத்தியில் எந்த அரசு இருந்தாலும், உ.பி., மாநிலம் மீது, மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதைதான், வழக்கமாக வைத்துள்ளன. மத்தியில் இருந்த அரசுகளுடன், சுமுக உறவை, நாங்கள் கடைப்பிடித்தாலும், இந்த எண்ணம் மாறவில்லை. எனக்கு மத்திய அரசிடமிருந்து, முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
அகிலேஷ் யாதவ், உ.பி., முதல்வர் - சமாஜ்வாதி
பீஹாரில் காட்டாட்சி!
பீஹாரில், 15 ஆண்டுகளுக்கு முன் இருந்த காட்டாட்சி, மீண்டும் திரும்பியுள்ளது. சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு மாநில அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம். அரசு இயந்திரம் முற்றிலும் செயல் இழந்துள்ளது. கொலை, கொள்ளை, பலாத்கார சம்பவங்கள், அன்றாட சம்பவங்களாகி விட்டன.
ராதாமோகன் சிங் , மத்திய அமைச்சர் - பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X