சமாஜ்வாடி கட்சிக்கு குற்றப்பின்னணி உடையோர் தேவையில்லை: அகிலேஷ்

Updated : ஜூன் 26, 2016 | Added : ஜூன் 26, 2016 | கருத்துகள் (10)
Share
Advertisement
லக்னோ: சமாஜ்வாடி கட்சிக்கு குற்றபின்னணி கொண்ட முக்தர் அன்சாரி போன்றோர் தேவையில்லை என முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.உத்திரப்பிரதேசத்தில் கொள்ளைக்காரராக இருந்து அரசியல்வாதியாக ஆன அன்சாரியின் கட்சி சமீபத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்தது. அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங், அன்சாரியை வரவேற்றுள்ள நிலையில் அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தனது
சமாஜ்வாடி கட்சிக்கு குற்றப்பின்னணி உடையோர் தேவையில்லை: அகிலேஷ்

லக்னோ: சமாஜ்வாடி கட்சிக்கு குற்றபின்னணி கொண்ட முக்தர் அன்சாரி போன்றோர் தேவையில்லை என முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.உத்திரப்பிரதேசத்தில் கொள்ளைக்காரராக இருந்து அரசியல்வாதியாக ஆன அன்சாரியின் கட்சி சமீபத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்தது. அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங், அன்சாரியை வரவேற்றுள்ள நிலையில் அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.நான் முக்தர் அன்சாரியை வரவேற்கவில்லை. அவரது கட்சி எங்களுடன் இணையும் முடிவினை நான் எடுக்கவில்லை. அன்சாரி கட்சியில் இணைவதன் மூலம் ஊடகங்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் அதை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், இது கட்சியின் உள்விவகாரம் என்றும் அதில் தனக்கு வெறுப்பு எதுவும் இல்லை என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகிலேஷ் இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
26-ஜூன்-201616:28:29 IST Report Abuse
Endrum Indian அப்படின்னா அதிலே முதலில் உன் பேர் தானே இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
26-ஜூன்-201615:46:46 IST Report Abuse
Ravichandran பலே கில்லாடி பேச்சுப்பா உன்னது, செம டகால்டி ஆள இருப்ப போலியிருக்கே. அப்பிடியே இரு நாடு உருப்பட்டுரும், நாங்களும் தான்,,,,,,,,,,
Rate this:
Cancel
Subbu - chennai,இந்தியா
26-ஜூன்-201611:35:12 IST Report Abuse
Subbu இந்த சமாஜ்வாடி கட்சியே குற்றவாளிகள், குற்றப்பின்னணி உடையவர்கள் அதிகம் உள்ள கட்சிதான், இவர்கள் ஆட்சியை பிடித்ததே அவர்களின் உதவியுடன்தான், பின் எப்படி அவர்கள் இல்லாமல் கட்சி நடத்தி மீண்டும் ஆட்சியை பிடிப்பது, இது ஒரு நாடக வசனமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X