பொது செய்தி

இந்தியா

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய விமானப்படையின் புதிய சாதனை

Added : ஜூன் 26, 2016 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி:சுகோய் 30 ரக போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. நீண்ட தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த பிரமோஸ் ரக ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் பிரமோஸ் விண்வெளித் திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது. இந்தியாவிடம் உள்ள அதிநவீன மற்றும் நீண்ட தூரம் பறந்து சென்று தாக்குதல்
 பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய விமானப்படையின் புதிய சாதனை

புதுடில்லி:சுகோய் 30 ரக போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. நீண்ட தூரம் சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்த பிரமோஸ் ரக ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி மையம் பிரமோஸ் விண்வெளித் திட்டத்தின் கீழ் தயாரித்து வருகிறது. இந்தியாவிடம் உள்ள அதிநவீன மற்றும் நீண்ட தூரம் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் சுகோய்-30 ரக போர்விமானங்களில் இந்த ஏவுகணையை பொருத்தி அதை பரிசோதித்தது.
இதற்கான செயல்விளக்க நிகழ்ச்சி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் விமான நிலைய பகுதியில் நேற்று நடந்தது. இந்த சோதனையை தொடர்ந்து வரும் மாதங்களில் 2.5 டன் எடை கொண்ட பிரமோஸ் ரக ஏவுகணையை சுகோய்-30 விமானங்களில் பொருத்தி அசல் சோதனை நடத்துவதற்கான வாய்ப்பு நெருங்கி உள்ளதாக ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி மைய அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
முதல் முறை:இது குறித்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின்(நாசிக்) தலைமை நிர்வாக இயக்குனர் சுதிர்குமார் மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், ''நீண்ட தூரம் பறந்து தாக்குதல் நடத்தும் போர் விமானங்களில் சக்திவாய்ந்த ஏவுகணை இணைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு இருப்பது உலக வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த சாதனை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படை, பிரமோஸ் ஏவுகணை திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி'' என்றார். இந்தியாவின் இச்சோதனை உலக நாடுகளை வியப்படையச்செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbu - chennai,இந்தியா
26-ஜூன்-201611:18:36 IST Report Abuse
Subbu நம்நாட்டின் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள், இந்த பிரமோஸ் ஏவுகணை ரஷ்யநாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் மேம்படுத்தப்பட்டு நம்நாட்டின் தயாரிக்கப்பட்டது. அதை மென்மேலும் நமது விஞ்ஞானிகள் மேம்படுத்தி உள்ளனர். இது நம்நாட்டின் விஞ்ஞான அறிவு மேம்பட்டுள்ளதை காட்டுகிறது. இதுபோன்ற நவீன ஏவுகணைகள், சீனா, பாகிஸ்தான் போன்ற எதிரிகளிடம் இருந்து நம்மை காக்க உதவும்.
Rate this:
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
26-ஜூன்-201609:59:15 IST Report Abuse
kuppuswamykesavan நம் விஞ்ஞானிகள், உண்மையில் உலகதரம் மிக்கவர்கள் தான். இதற்கு சிறந்த உதாரணம், ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கை கோள்கள் ராக்கெட்டின் மூலம் செலுத்தும் விஞ்ஞானிகளே.
Rate this:
Cancel
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
26-ஜூன்-201608:07:33 IST Report Abuse
மணிமேகலை  இந்திய விஞானிகளுக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X