அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'செயல் அலுவலரை தாக்கியது தான்
அமைதி பூங்காவின் அடையாளமா?'

சென்னை:'கோவில் திருவிழா பத்திரிகையில், அமைச்சர் பெயர் இடம்பெறவில்லை என்பதற்காக, செயல் அலுவலரை, அ.தி.மு.க.,வினர் தாக்கியது தான், அமைதிப் பூங்காவின் அடையாளமா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 'செயல் அலுவலரை தாக்கியது தான் அமைதி பூங்காவின் அடையாளமா?'

அவரது அறிக்கை:'தமிழகம், அமைதிப்

பூங்காவாக திகழ்கிறது' என சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.

சென்னைகல்லுாரி மாணவர் உட்பட, இருவர் வெட்டிக் கொலை; தளி அருகே வீட்டில், நான்கு பேரை கட்டிப் போட்டு, 25 சவரன் நகை கொள்ளை;

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில், பெண் இன்ஜினியர் சுவாதி கொலை; விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் உள்ளபெருமாள் கோவில் திருவிழா பத்திரிகையில், அமைச்சர் பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக, அந்தக் கோவில் செயல் அலுவலரை, அ.தி.மு.க.,வினர் தாக்கி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., ஆட்சியில், சட்டம் - ஒழுங்கை பொறுத்தவரை, அமைதி பூங்காவாக

Advertisement

திகழ்வதற்கு, இவைதான் அடையாளமா?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mariadoss E - Trichy,இந்தியா
27-ஜூன்-201620:43:39 IST Report Abuse

Mariadoss Eஇது இப்ப மக்கள் மனதில் இருக்கும் சாதாரண கேள்விகள் தான் ....ஒரு மக்கள் பிரதிநிதி இதனை கேட்பதில் எந்த தவறும் இல்லை .... விடை சொல்பவர் யார் என்று தான் தெரியவில்லை....

Rate this:
Susainathan - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-201619:21:30 IST Report Abuse

SusainathanI think may be dmk doing this all

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
27-ஜூன்-201621:10:38 IST Report Abuse

Panneerselvam Chinnasamyஇப்படி ஏதாவது சொல்லிட்டா அதை உலகம் நம்புமா? சட்டத்தை தூக்கி நிறுத்தவேண்டிய அமைச்சரே ரௌடியிசம் பண்ணுவார். உடனே நீங்க தி மு க மேலே பழி போட்டு தப்புச்சிக்கிவீங்க.. சொந்த மகனா இருந்தாலும் ரௌடிசம் பண்ணுனா கலைஞர் பொறுத்து கொள்ள மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அது சரித்திரம். ...

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
27-ஜூன்-201618:28:57 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஇதில் தமிழக அரசின் தவறு எங்கிருக்கிறது ? உன் வீட்டில் நீயும் உன் தம்பியும் அடித்து கொள்வீர்கள் வெட்டிக் கொள்வீர்கள் இதற்கு காவல்துறையோ, அரசோ பொறுப்பேற்க வேண்டுமா ? மூன்று வயது வந்த பெண்களை வைத்திருக்கும் ஒருவர் தரம் கெட்ட மனிதனுடன் குடும்பம் நடத்தி தான் மட்டுமன்றி தன் மகள்களை பலி கொடுத்துள்ளாள் இதில் அரசின் தவறு எங்கிருந்து வந்தது? நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பலர் முன்பே ஒரு வாலிபன் ஒரு பெண்ணை வெட்டுகிறான் .அவர்களின் காதல் தோல்வி வெற்றி இவற்றில் அரசு என்ன செய்யமுடியும் ?எந்த நிமிடத்தில் யார் யாரை வெட்டுவார்கள் ,கொலை செய்வார்கள் என்று ஒரு அரசு எதிர்பார்த்து ஒவ்வொருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கமுடியுமா ? ரயில்வே போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? எதையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கும் நீங்கள் அறிய ஒரு மாநிலத்தின் சட்டஒழுங்கு பிரசினை என்றால் என்ன என்று விலாவாரியாக தெரிவிக்கிறேன் 1.அண்ணாமலை யூனிவர்சிட்டி மாணவர்கள் காவல்துறையால் திமுக குண்டர்களால் தாக்கப்பட்டது /கொல்லப்பட்டது 2.திருச்சி கிளைவ் ஹாஸ்டல் மாணவர்கள் கொலை வெறியோடு திமுக குண்டர்களால் தாக்கப்பட்டது 3. தா. கிருட்டிணன், லீலாவதி ,ஆலடி அருணா நடு ரோட்டில் வெட்டி திமுக கட்சிக்காரர்களால் கொல்லப்பட்டது 4.தினகரன் ,மக்கள் குரல் அலை ஓசை ,துக்ளக் ,தினமலர் மற்றும் பல பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டு , குறிப்பாக தினகரன் ஊழியர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டது 5. அத்வானி கலந்து கொள்ள வந்த கோவை பொதுக்கூட்டத்தில் 14 இடங்களில் குண்டுகள் வைத்து பல அப்பாவி உயிர்கள் பலியானது 6.சென்னை சேத்துப்பட்டு RSS அலுவலகம் குண்டுவெடிப்பு 7.சட்டக்கல்லூரி மாணவர் போலீஸ் கண்ணெதிரே மோசமாக தாக்கப்பட்டது அதை காவல்துறை செய்வதறியாது கையை பிசைந்துகொண்டு வேடிக்கை பார்த்தது 8. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ,மற்றும் நீதிபதிகள் தாக்கப்பட்டது 9.இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் கோடம்பாக்கம் ஜக்கரியா காலனியில் EPRLF பத்மநாபா விடுதலை புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு , புலிகள் தப்பியோட வழி வகை செய்யப்பட்டது 10. திமுக குடும்ப உறுப்பினர்களால் பலர் நிலம்/சொத்துக்கள் பறிக்கப்பட்டது 11. சாதிக் பாட்ஷா என்ற 2G ஊழல் வழக்கு அப்ரூவர் மர்மமாய் கொலை செய்யப்பட்டது . மேற்கூறிய சம்பவங்கள் தமிழகத்தில் நடந்த சட்டவிரோத/சட்ட ஒழுங்கற்ற செயல்கள் திமுக ஆட்சியில் அரங்கேற்றப்பட்ட சில செயல்கள். 12. சபர்மதி ரயில் நிலையத்தில் 58 கரசேவகர்கள் உயிரோடு எரிக்கப்பட்டு ,அதன் விளைவாக குஜராத்தில் வன்முறை வெடித்து இறந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், (ஹிந்துக்கள் ,முஸ்லிம்கள் ) 13. மொராதாபாத் என்று உத்தர பிரதேசத்து மதக்கலவரங்கள், 14. பிஹாரில் நடக்கும் ஜாதி சண்டைகள் , குஜராத் ,ஹரியானா ,ராஜஸ்தான் மாநிலங்களில் இட ஒதுக்கீடு கேட்டு படேல் , ஜாட், குஜ்ஜார் இன மக்களின் வன்முறை போராட்டங்கள் 15. அமெரிக்கா ,ஜெர்மன் ,பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளில் நடக்கும் குண்டு வெடிப்புகள், பள்ளிகளில் நுழைந்து மாணவர்களை சுட்டுத்தள்ளுவது , ஆடிட்டோரியம் ,சினிமா திரை அரங்கம் உள் நுழைந்து மக்களை சுட்டு தள்ளுவது ,மும்பையில் பாக் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை தாக்கியது, குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது போன்று எந்த வித சம்பவமும் அம்மா ஆட்சியில் நடக்காமல் இருப்பதால் தமிழகம் அமைதிப்பூங்கா என்று அழைக்கப்படுகிறது.. தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் அமைதியான முறையில் நடத்தமுடியும், ஆனால் ஜம்மு காஷ்மீர் மேற்குவங்கம், அஸ்ஸாம், பிஹார் ,உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடத்தமுடியாது . குறைந்தது 6 அல்லது எட்டு தேதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு கருத்து கூறும் அன்பர்கள் இந்த விஷயத்தை சமுதாய ஒழுக்கக்கேடு என்ற விஷயத்தில் அலசாமல் அதிமுக என்ற கட்சி /ஆட்சி மீது குற்றம் காண்பது மஞ்சள் காமாலைக் கண்ணோட்டம் என்பது தவிர வேறில்லை. இந்த அரசல்ல வேறு எந்த அரசாயினும், கவுரவ கொலை, குடும்ப பிரசினையால் ஏற்படும் கொலை வன்முறை, , கள்ளக்காதலால் ஏற்படும் கொலைகள் என்று தனிமனித விளைவுகளை எதிர்பார்த்து அது நடைபெறாது தடுக்கும் சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. இந்த மாதிரி கொலைகள் ,கற்பழிப்புகள், கள்ளக்காதல் கொலைகள் ,சொத்துத்தகராறு, நிலத்தகராறு கொலைகள் ஆண்டாண்டு காலம் நாடெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. .இந்த ஆட்சி மீது ஏதேனும் புழுதி வாரி தூற்ற வேண்டி காத்திருக்கும் ,அரசியல் கட்சிகள், ஊடகங்கள், நாளிதழ்கள் ,இவர்கள் அனைவருக்கும் இது அரசின் தவறல்ல என்று தெரிந்து இருந்தும் காமாலை கண்ணோடு பூதக்கண்ணாடி அணிந்து, இந்த விஷயங்களை பூதாகாரமாக சித்தரிக்கின்றன. ஆட்சியில் இருப்போர் மகன் மகள், பேரன்கள் உற்றார், உறவினர் ,திமுக ஆட்சியில் இருந்த போது நட்சத்திர ஓட்டல்களில் துப்பாக்கியுடன் ரகளை செய்தது போல் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை . வேளாண் அதிகாரி ஒருவர் மன அழுத்தத்தால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதற்கு ஒரு அதிமுக அமைச்சர் மீது அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அமைசசர் பதவி இழந்து தண்டிக்கப்பட்டுள்ளார். தர்காலிக முதல் அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா ஒரு பூஜாரி தற்கொலை செய்ய காரணம் என்பதால் வழக்கு தொடரப்பட்டு அதை அவர் எதிர்கொண்டுள்ளார். அதிமுக ஆட்சியில். தவறு செய்த குற்றவாளிகள் யாரையும் காவல்நிலையத்திற்குள் நுழைந்து அமைச்சரோ அல்லது மாவட்ட செயலரோ இல்லை அதிமுக பிரமுகரோ மீட்டு வந்ததில்லை. இதெல்லாம் திமுக ஆட்சியில் சர்வ சாதாரணமாக நடந்தது. ஒரு காவல்துறை அதிகாரியே திமுக குண்டர்கள் அவர் நேர்மையாக நடந்து கொண்ட காரணத்தால் பாளையம்கோட்டை ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை அரிவாளால் வெட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் பாட்டிலை அருகில் கொண்டு சென்று குடிக்கமுயலும்போது திரும்ப கைய மடக்கி அவர் துடிதுடித்து சாவதை வேடிக்கை பார்த்தவர்கள். இதை காரில் இருந்தபடி அப்போதைய திமுக அமைசசர் மைதீன்கான் (இப்போதைய பாளையம்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். திமுக ஆட்சியில் இப்படி செயல்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை இதற்கெல்லாம் முதலில் கருணா பதில் சொல்லட்டும் .எனக்கென்னவோ மே 23 ஆம் தேதி அம்மா பதவியேற்றபின் தோல்வியால் புலம்பிக்கொண்டிருந்த இந்த கிழம் தான் கட்சி குண்டர்களை வைத்து இந்த கொலைகளை செய்கிறதோ என்று சந்தேகம். .சென்னை மக்கள் திமுக ரவுடி சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அதற்கான விலையை கொடுக்கிறார்களோ என்று சந்தேகம்.

Rate this:
jagan - Chennai,இந்தியா
27-ஜூன்-201622:02:39 IST Report Abuse

jaganசின்னதா எழுத பழகு...படிக்காமலே 1 ஸ்டார் தான் போ... ...

Rate this:
naankabali - kovai,இந்தியா
27-ஜூன்-201622:31:11 IST Report Abuse

naankabaliஉண்மையை உரக்க சொன்னீர். வீரபாண்டியரின் அங்கம்மாள் காலனி கொலைகளை சேர்க்க மறந்து விட்டீர்கள். ...

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
28-ஜூன்-201604:19:22 IST Report Abuse

Panneerselvam Chinnasamyவழக்கம் போல ராஜாமணி வக்காலத்து வாங்காமலே ஒரு பெரிய defense statement கொடுத்திருக்கிறார். அதில் உண்மைக்கு புறம்பாக /திரித்து தி மு க மீது காழ்புணர்ச்சியோடு கருத்து கூறி இருப்பதால் பதில் தர வேண்டியது அவசியம் ஆகிறது.. 1. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலாட்டா செய்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி செய்தது. அதில் நீச்சல் தெரியாத ஒரு மாணவர் குளத்தில் விழுந்து இறந்து போனார். அது விபத்து. ஆனால் அ தி மு க ஆட்சியில் எத்தனை துப்பாக்கி சூடுகள். எத்தனை போராட்டம் செய்தவர்கள், வன்னியர் போராட்டம், மீனவர் போராட்டம் தலித்துக்கள் போராட்டம் உயிர் இழந்திருக்கிறார்கள். புள்ளிவிவரம் எடுத்தால் அதிகம் உயிர் பலி வாங்கியது அ தி மு க காலத்தில்தான் என்பது நிரூபணம் ஆகும்..2. கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் ஏன் நடந்தது.? ஒரு பெண்ணை கல்லூரி மாணவர்கள் டீஸ் செய்ததால் நடந்தது. அதில் பெரிய அளவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.. அது ஒரு துக்ளக் ஸ்டோரி அவ்வளவுதான்..3. ஆலடி அருணா கொலை வழக்கில் ராஜா தொழில் முறை விரோதத்தால் கொன்றது நிரூபணமாகி அவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தும் விட்டது. லீலாவதி கொலை லோக்கல் கட்சி விவகாரத்தால் நடந்தது. தா கிருட்டிணன் கொலை வழக்கில் அவரது சகோதரரே சாட்சி பிரண்டதால் வழக்கு தோற்று விட்டது.. சரி ஜெயலலிதா ஆட்சியில் நடந்த மயிலை பாலன் கொலை வழக்கு, திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு இதை எல்லாம் convenientaaka மறந்து விட்டீர்களே...ஏன்? 4. தினகரன் பத்திரிக்கை தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் இப்போது தி மு க வில் இல்லை. அ தி மு க குண்டர்கள் எத்தனை பத்திரிக்கை நிருபர்களை, டிவி நிருபர்களை தாக்கி இருக்கிறார்கள், நக்கீரன் பத்திரிக்கை ஆஃபீஸில் நடத்திய கொலைவெறி தாக்குதல் இதை எல்லாம் convenientaaka மறந்து விட்டீர்களே.ஏன்? .5.ஆம்பூரில் கடந்த வருடம் நடந்த மத கலவரம் எவ்வளவு பொருள் நஷ்டம் இது யார் ஆட்சியில் நடந்தது.?6. பிஜேபி தலைவர்கள் சேலம் ரமேஷ்,வேலூர் அரவிந் ரெட்டி,முருகன்,வெள்ளையன் கொலை செய்யப்பட்டது யார் ஆட்சிக்காலத்தில். 7.& 8. சென்னை உயர் நீதி மன்றத்தில் போலீஸ் வக்கீல் தாக்குதல்கள், சென்னை உயர் நீதி மன்றம் உள்ளூர் போலீஸ் மீது நம்பிக்கை இழந்து மத்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டது யார் ஆட்சி காலத்தில்.9.LTTE ஆரம்ப காலத்தில் தனி ஈழம் கேட்ட போது தி மு க ஆதரவு தெரிவித்தது. ஆனால் ராஜிவ் காந்தி கொலைக்கு பிறகு அத்துடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை. அதனால் அவர்கள் செய்த கொலையோடு தொடர்பு படுத்தி பேச கூடாது. அப்படி பார்த்தால் MGR கூட LTTE ஆதரவாளர்தான்.11. சாதிக் பாட்சா தற்கொலை என்று நிரூபணம் ஆகி வழக்கும் முடிந்து விட்டது. கொலை என்று நீங்கள் சொல்வதால். நீங்கள் சாட்சிகளை ஏன் மறைத்து வைத்தீர்கள் என்று உங்கள் மீது அரசு கேஸ் போடும்?12,13,14&15.தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாதது. எனவே அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..உங்கள் பொது கருத்து::" இந்த மாதிரி கொலைகள் ,கற்பழிப்புகள், கள்ளக்காதல் கொலைகள் ,சொத்துத்தகராறு, நிலத்தகராறு கொலைகள் ஆண்டாண்டு காலம் நாடெங்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. .இந்த ஆட்சி மீது ஏதேனும் புழுதி வாரி தூற்ற வேண்டி காத்திருக்கும் ,அரசியல் கட்சிகள், ஊடகங்கள், நாளிதழ்கள் ,இவர்கள் அனைவருக்கும் இது அரசின் தவறல்ல என்று தெரிந்து இருந்தும் காமாலை கண்ணோடு பூதக்கண்ணாடி அணிந்து, இந்த விஷயங்களை பூதாகாரமாக சித்தரிக்கின்றன." என்னுடைய பதில்: முன்பை விட குற்றங்கள் அதிகரித்து விட்டன. முன்பெல்லாம் சென்சேஷனல் MURDERS மாதம் ஒன்று ரெண்டு நடக்கும்.இப்போது தினம் ரெண்டு மூணு நடக்கிறது. காரணங்கள்: 1. நிறைய குற்றங்கள் மதுவின் INFLUENCIL நடக்கிறது. அரசு மது கடைகளை மூடினால் குற்றங்கள் KURAIYA வாய்ப்பு உள்ளது. 2.கரை வேட்டிகள் காவல் துறையில் தலைஇடக்கூடாது. கட்ட பஞ்சாயத்து., கட்சி உறுப்பினர் என்றால் காப்பாற்றுவது. இதெல்லாம் குற்றவாளிகளை வளர்க்கும் உரமாக இருக்கிறது. உண்மையிலேயே நீங்கள் குற்றங்கள் குறைய வேண்டு மென்றால் POSITIVE ஆக திங்க் பண்ணுங்கள். எதற்கெடுத்தாலும் மஞ்சள் துண்டாரை காரணம் சொல்லி தப்பிக்க முயலாதீர்கள். இருக்கும் குற்றம் குறைகளை களைய பாருங்கள் நாடு நலம் பெரும். வாழ்த்துக்கள். ...

Rate this:
மேலும் 61 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X