'கட்சி துவங்கியது முதல் தற்போது வரை வசூலித்த, 500 கோடி ரூபாய் எங்கே' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, மாவட்ட செயலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சட்டசபை படுதோல்விக்கு பின், தே.மு.தி.க.,வை பலப்படுத்தும் முயற்சியில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக, ஆலோசனை கூட்டங் களை நடத்தியுள்ளார். வேட்பாளர்களாக போட்டியிட்ட கட்சியினர் மற்றும் மாவட்ட செயலர் களை, தனித்தனியாக அழைத்தும் பேசியுள்ளார்.
இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பாக பல்வேறு மாவட்ட செயலர்கள், தி.மு.க.,வில் இணைந்த னர். அவர்களுக்கு பதிலாக, மாவட்ட பொறுப் பாளர்களை விஜயகாந்த் நியமித்தார். அவ்வாறு, நியமிக்கப்பட்டவர் களும், தி.மு.க., வில் சேரத் துவங்கி உள்ளனர். இது, விஜயகாந்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.இவ்வாறு அதிருப்தியில் உள்ளவர்களை, தன் மைத்துனர் சுதீஷ் மூலம் சமரசம் செய்யும் முயற்சியையும் விஜயகாந்த் கையில் எடுத்துள்ளார்.
இந்நிலையில், தே.மு.தி.க.,வின், 14 மாவட்ட செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பெயரில் விஜயகாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் நேற்று ஒரு கடிதம் பரவி யது.அதில், கட்சியை வைத்து விஜயகாந்த் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கூடவே,
விஜயகாந்த் மற்றும் அவர் மனைவியின்செயல்பாடு களால் கட்சி அழிந்து வருவது குறித்தும், பல்வேறு விதமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அந்த கடிதத்தில், மா.செ.,க்கள் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பற்றி அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
*
தனித்தன்மையுடன் தே.மு.தி.க.,வை நடத்துவேன் என்று சொல்லி கட்சி ஆரம்பித்த
நீங்கள், கடந்த தேர்தலில், வைகோவை மறைமுகமாக, கட்சிக்கு தலைவர்
ஆக்கிவிட்டீர்கள்.தே.மு.தி.க.,வை வழிநடத்த வைகோ யார்?
*'விஜயகாந்த் தவறு செய்தால் அவரை நாங்கள் விடமாட்டோம்' என வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் அறிவித்தனர். உங்கள் தவறை கண்டிக்கும் போலீஸ் வேலையை இவர்களுக்கு யார் கொடுத்தது?
* துவக்கத்தில் இருந்து தனித்து தான் போட்டி என அறிவித்து, 2006ல், 234 தொகுதிகளில் போட்டியிட் டோம்; தவறில்லை. ஆனால், போட்டியிட்டவர் களில், 34 பேராவது, தற்போது கட்சியில் இருக்கின்ற னரா? அதே போலத் தான், 2009 பார்லிமென்ட் தேர்தலில், 40 பேர், கட்சி சார்பில் நிறுத்தப்பட்டனர். அவர்களில் நால்வராவது, இப்போது நம்மிடம் உள்ளனரா?
* 'ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை' பொது காரியத்துக்காக, அரசு கையகப்படுத்தியதை வைத்து அரசியல் செய்தீர்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்று, அதற்கு ஈடாக, 9 கோடி ரூபாய் வாங்கினீர் கள். அதன்பின்னும், அதை வைத்து தொடர்ந்து அரசியல் செய்தது ஏன்? கிடைத்த பணத்தில், ஐந்து ரூபாயையாவது கட்சிக்காக செலவழித்தீர்களா?
* சட்டசபை தேர்தல் நேரத்தில், தி.மு.க.,வுடன் கைகோர்க்க, கூட்டணி பேச்சு நடத்தினீர்கள். பின், யாரையும் கேட்காமல் உங்கள்மனைவி விருப்பப் படி, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தீர்கள். அது ஏன்?
* அப்படியென்றால், கட்சியின் தலைவர் நீங்களா? உங்கள் மனைவியா?
* 'ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் என் ஒரே வேலை' என்று அறிவித்த நீங்கள், அ.தி.மு.க.,வின், 'பி' அணி என வர்ணிக்கப்பட்ட,
ம.ந., கூட்டணியில் இணைந்து, அ.தி.மு.க.,வை ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்து விட்டீர்களே; அந்தத் தவறை இப்போதாவது உணருகிறீர்களா?
* கடந்த, 2005லிருந்து, 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என, 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தீர்கள்; அந்த பணமெல்லாம் எங்கே?
* கட்சி பெயரில், 'டிரஸ்ட்' உள்ளது. ஆனால், கட்சிக்கும் டிரஸ்டிற்கும் எந்தவித சம்பந்தமும் ஏற்படுத்தாததோடு, கட்சிக்கு வரும் எல்லா நன்கொடைகளையும் டிரஸ்ட் பெயரில் வாங்கிக் கொண்டது ஏன்? அந்த டிரஸ்டில் நீங்கள், உங்கள் மனைவி பிரேமலதா, உங்கள் மைத்துனர் சுதீஷ் மூன்று பேர் மட்டும் தானே உறுப்பினர்களாக உள்ளீர்கள்?
* தே.மு.தி.க.,வால், கட்சியினர் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆனால், உங்கள் குடும் பம் மட்டுமே தொடர்ந்து கட்சியை வைத்து அனுபவித்து வருகிறது. அதனால் தான், சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர் பாகவும், கட்சி நலன் பார்க்காமல், சொந்த நலன் பார்த்து விட்டீர்கள். மொத்தத்தில், உங்கள் மனைவி பிரேமலதா பேச்சை கேட்டு, தவறான முடிவெடுத்து, இன்று கட்சியே காணாமல் போய்விட்டது.
* இத்தனைக்கு பின்னும், நாங்கள், உங்களோடு கட்சியில் தொடர்ந்து பயணிப்பது சரியாக இருக்காது தானே? இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறின.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (65)
Reply
Reply
Reply