பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
லோக்பால் சட்டத்தின்
கீழ் என்.ஜி.ஓ.,க்கள்

புதுடில்லி:நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு சாரா அமைப்புகள் இயங்கி வருகின்றன; இவை வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் நன்கொடை வசூலிக்கின்றன. இதைத் தவிர, சில அமைப்புகளுக்கு மத்திய அரசும் மானியம் அளித்து வருகிறது.

 லோக்பால் சட்டத்தின் கீழ் என்.ஜி.ஓ.,க்கள்

இதுபோன்ற அமைப்புகளுக்கு வருமான வரி விலக்கு உட்பட, பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு பெறப்படும் நிதியை, சில அமைப்புகள் முறைகேடாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், இரண்டு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அரசு மானியம் அல்லது, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் அரசு சாரா அமைப்புகள், லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

லோக்பால் சட்டத்தின்படி, இந்த அமைப்புகள் மற்றும் அதன் தலைமை நிர்வாகிகள், தங்களுடைய ஆண்டு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் அல்லது நிர்வாகிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால், லோக்பால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப் படும். இந்த புதிய உத்தரவின்படி, இந்த அமைப்பின் நிர்வாகிகள், அரசு ஊழியர்களாக கருதப்படுவர்.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை, சமீபத்தில் இந்த உத்தரவுகளைபிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு, அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசு உதவி பெறும் சட்டம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் பொருந்தும். அதே நேரத்தில், மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆண்டு தோறும்...:

Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா
27-ஜூன்-201620:50:30 IST Report Abuse

கார்த்திக் சித்தன்மத மாற்றம், கலாச்சார சீரழிவு, பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஜாதி மோதல்களை தூண்டுதல் போன்ற பல வேலைகளை செய்யும் NGO க்களின் பணி மிகவும் கடினமானது. இப்படி முட்டுக்கட்டை போட்டால் பொருளாதார வளர்ச்சியை அவர்களால் எப்படி தடுக்க முடியும்? நாட்டை வளர்ச்ச்செய்ய வேண்டும், தேச விரோத சக்திகளை அளிக்க வேண்டும் என்ற மோடியின் பாசிச, மதவாத எண்ணம் நடக்காது. நடக்கவே விட மாட்டோம்.

Rate this:
Subbu - chennai,இந்தியா
27-ஜூன்-201620:06:57 IST Report Abuse

Subbuஇந்த என்.ஜி.ஓ. என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் கொள்ளை அடித்து வருகின்றன. இதில் முக்கியமாக வெளிநாடுகளில் நம் நாட்டின் ஏழ்மை, வறுமையை காட்டி டாலர்களில் பணம்பெற்று பொய் அறிக்கைகள், படங்கள், வீடியோக்கள் அனுப்பி வசூல் செய்து கொள்ளை அடிக்கிறார்கள். இதில் பல லெட்டெர் பேட் நிறுவனங்கள், முக்கியமாக மதமாற்றங்கள் செய்வதற்கு இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறத., எனக்கு தெரிந்து ஒரு பெந்தகோஸ்தே பாதிரியார்,இப்படி வெளிநாட்டு நிதியுதவியில் மதமாற்றங்கள் பெரிய அளவில் செய்து பல நூறு கோடிகள் சொத்து சேர்த்து விட்டார்.இது தவிர தீவிரவாதம் இங்கு பரவவிடவும் கோடிக்கணக்கில் நிதி வந்துசேர்ந்தது தீவிரவாதம் பரப்ப பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது, இவை ஒடுக்கப்படவேண்டும்.

Rate this:
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
27-ஜூன்-201614:47:10 IST Report Abuse

Sambasivam Chinnakkannuஎன் ஜி ஓ , மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அமைப்புகளை கண்காணிக்க என மாவட்டம் தோறும் நாடு முழுதும் நீதிமன்றங்களில் தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும் ,அந்த அமைப்பு மத்திய அரசுக்கு மாதம் ஒரு முறை அறிக்கை தர வேண்டும் .....அரசு செய்தால் பல கோடி ஹவாலா பணம் பிடிபடும் ...

Rate this:
parthiban - coimbatore,இந்தியா
28-ஜூன்-201609:21:54 IST Report Abuse

parthibanகண்டிப்பாக ...

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X