கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நீதிமன்றங்களில் 3,600 காலியிடங்கள்
ஐகோர்ட் ஆண்டு அறிக்கையில் தகவல்

தமிழக நீதித்துறையில், ஒட்டு மொத்தமாக, 3,600 காலியிடங்கள் உள்ளன. உயர் நீதிமன்றம் மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்களிலும் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

 நீதிமன்றங்களில் 3,600 காலியிடங்கள் ஐகோர்ட் ஆண்டு அறிக்கையில் தகவல்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75. தற்போது, 38 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்; 37 இடங்கள் காலியாக உள்ளன.
கீழமை நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, மாவட்ட நீதிபதி, மாஜிஸ் திரேட், சிவில் நீதிபதிகள் என, 1,015 பணி யிடங்களில், 969 பேர் தான் பணியில் உள்ளனர்;

46 பணியிடங்கள் காலி: மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் தனி உதவி யாளர்கள், நீதிமன்ற அதிகாரிகள், துறை

அதிகாரிகள், உதவி அதிகாரிகள், உதவியாளர்கள், டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள் என, 2,062 பணியிடங்கள் உள்ளன. மதுரை கிளையில், 716 பணியிடங்கள் உள்ளன.

அனுமதிக்கப்பட்ட இந்த பணியிடங்களில், 2,139 பேர் தான்பணியில் உள்ளனர். சென்னை உயர் நீதி மன்றம், மதுரை கிளையை சேர்த்து, 639 பணி யிடங்கள் காலியாக உள்ளன. கோவை, மதுரையில் உள்ள ஜுடிசியல் அகாடமியிலும், தலா, 15 இடங்கள் என, 30 இடங்கள் காலியாகவே இருக்கின்றன.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அதிகாரிகள் அளவிலான பதவிகளாக பதிவாளர்கள், துணை பதிவாளர்கள், உதவி பதிவாளர்கள் என, மொத்தம், 119 பதவிகள் உள்ளன. அவற்றில், 101 பேர் பணியில் உள்ளனர். மீதி இடங்கள் காலி.

கீழமை நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, 32 மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களில், 17 ஆயிரத்து, 822பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 14 ஆயிரத்து, 859 பேர் தான் பணியில் உள்ளனர். 2,963 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை.

சென்னையில் மட்டும், சிவில் நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்களில், 280 பணியிடங்கள் காலியாக

Advertisement

உள்ளன.ஒட்டு மொத்தமாக பார்த்தால், சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை, கீழமை நீதிமன்றங்களில், 3,651 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதாவது, 15 சதவீதத்துக் கும் மேல் காலியிடங்கள் உள்ளன. பணியாளர் கள் காலியிட விவரங்கள், உயர் நீதிமன்ற ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதித்துறையில், பணியாளர்கள் பணியிடங் களை காலியாக வைத்திருக்காமல், உடனடி யாக நிரப்ப, உயர் நீதிமன்ற பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Vellurankottai,இந்தியா
27-ஜூன்-201613:25:21 IST Report Abuse

Balajiவழக்குகள் தேங்குவதுக்கு இதுதான் காரணமா சொல்லுங்கள் நீதி மான்களே.

Rate this:
Balagan Krishnan - bettystown,அயர்லாந்து
27-ஜூன்-201612:57:38 IST Report Abuse

Balagan Krishnanநீதிபதி பதவிக்கு 40 லட்சம் என்று நான் கேள்விப்படுகிறேன்

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-ஜூன்-201610:05:53 IST Report Abuse

Kasimani Baskaranஒரு ஆளுக்கு இத்தனை வழக்குகள் தொடுக்க மட்டுமே உரிமை உள்ளது என்று சட்டம் போடவேண்டும்... இப்பொழுது அம்மாஜி தொடுத்த மான நஷ்ட வழக்கே 100 க்கு மேல் இருக்கும்... வெட்டி வேலை செய்ய ஏன் வீணாக வரிப்பணத்தை செலவு செய்யவேண்டும்...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X