பதிவு செய்த நாள் :
கண்டிப்பு !
சுப்பிரமணியன் சாமிக்கு மோடி ...கட்சியை விட
யாரும் பெரியவர் அல்ல என்கிறார்

புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்த கருத்துக்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கட்சியை விட யாரும் பெரியவர் அல்ல


இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, அதிரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உள்ளார். ''சமீபத்திய சில விமர்சனங்கள் தேவையில்லாதவை; விளம்பரத்திற்காக இவ்வாறு செய்வது நாட்டுக்கு நல்லதல்ல; அரசு மற்றும் கட்சியை விட, யாரும் பெரியவர் அல்ல,'' என, அவர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி விமர்சனம் செய்தார். பா.ஜ., மூத்த தலைவரான, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குறித்தும், மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
இது நல்லதல்லசாமியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. அதே நேரத்தில், பா.ஜ., தலைமை, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கருத்து ஏதும் கூறவில்லை.
இந்நிலையில், தனியார் 'டிவி'க்கு அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மோடி கூறியதாவது:இது போன்ற விமர்சனங்கள், அது என்னுடைய கட்சியில் இருந்து வந்தாலும், வேறு கட்சியில் இருந்து வந்தாலும், அது முறையானதல்ல. விளம்பரத்திற்காக இது போன்று செயல்படுவது, நாட்டுக்கு நல்லதல்ல. மக்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அரசை விட,
கட்சியை விட, தாங்கள் பெரியவர் என்று யாராவது நினைத்தால், அது தவறு. சமீபத்தில், கட்சியின் கூட்டத்திலும் இதை வலியுறுத்தினேன்.ரகுராமுக்கு பாராட்டு'ரகுராம் ராஜன் மனதளவில் இந்தியராக இல்லை' என்று கூறுவதை

ஏற்க முடியாது. மற்ற எவரையும் விட, அவருடைய தேசப்பற்று குறைந்ததில்லை. அவர் எங்கு பணியாற்றினாலும்
, இந்தியாவின் நலனுக்காகவே பாடுபடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அவருடன் பணியாற்றிய அனுபவம், மிகவும் இனிமையானது. அவருடைய செயல்பாடுகளை நான் பாராட்டுகிறேன். பா.ஜ., அரசு அமைந்த உடன், முந்தைய காங்., அரசால் நியமிக்கப்பட்டிருந்த ரகுராம் ராஜனை,ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து நீக்கிவிடுவோம் என்று பேசினர்; அது பொய்த்து போனது.
அதுபோல தான், ரகுராம் ராஜன் தற்போது விலகுவதால், சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு குறைந்துவிடும், முதலீடுகள் குறைந்துவிடும் என்று கூறுவதும் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜெட்லி அதிருப்தி

நாடு திரும்பினார்நிதி அமைச்சகம் தொடர்பான அதிகாரிகள் மீதும், தன் மீதும், சுப்பிரமணியன் சாமி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எரிச்சலுாட்டிள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கட்சி
தலைமையை, ஜெட்லி வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சீனாவுக்கு சென்ற ஜெட்லி, தன் பயணத்தை, ஒருநாள் முன்னதாகவே முடித்து, நேற்று முன்தினம் இரவு, நாடு திரும்பினார்.

காங்கிரசுக்கு கண்டனம்

'டிவி' பேட்டியில், பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:
* பல்வேறு முக்கிய விஷயங்களில், எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு, விவாதம் நடத்துவதற்கு, அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதை ஏற்பதில்லை
* ஒரு கட்சிக்கு சில பிரச்னைகள் உள்ளன. ஆனால், அது பிரச்னையை ஏற்படுத்துகிறது; அது, எந்தக் கட்சி என்பது,
இந்த உலகுக்கே தெரியும்
* நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது நடந்து
கொண்டதையும், 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி, எதிர்க்கட்சியாக நடந்து கொள்வதையும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத சில கட்சிகள், அரசின் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. அதனால், அனைத்து எதிர்க்கட்சிகளையும் குறை
கூற விரும்பவில்லை.

பாகிஸ்தான்
* பாகிஸ்தானுடன் எப்போதும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

Advertisement


* எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து, சர்வதேச நாடுகள் சரியாக புரிந்துள்ளன
* பாகிஸ்தானில், யாருடன் பேச்சு நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடனா அல்லது அவர்களை நடத்துபவர்களுடனா என்ற சந்தேகம் உள்ளது
* பேச்சு நடத்துவதற்கான அனைத்து நியாயமான வழிகளையும், இந்தியா மேற்கொண்டுள்ளதை, உலக நாடுகளும், மக்களும் அறிவார்கள்.

என்.எஸ்.ஜி.,

* சீனாவுடன், நமக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக தீர்க்க முயற்சிகள் நடக்கின்றன
* என்.எஸ்.ஜி., ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் உறுப்பினராக, பல ஆண்டுகளாக, பல்வேறு அரசுகள்
முயற்சி மேற்கொண்டன
* தற்போது, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மற்றும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளோம்
* விரைவில், என்.எஸ்.ஜி.,யிலும் உறுப்பினராக சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான பிரகாசமான வாய்ப்புகள், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.

தப்ப முடியாது

* வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி விடலாம் என, சிலர் நினைக்கலாம்
* சட்டம் என்ன செய்யும் என்று, அவர்களுக்கு பாடம் கற்பிக்க, தற்போது நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது
* மோடியால், இது முடியும் என மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
28-ஜூன்-201622:28:14 IST Report Abuse

தாமரை ஜெட்லீயின் சில நடவடிக்கைகள் வசதியுள்ளவர்களுக்கு சாதகமாகவும் சாமானியனுக்கு பாதிப்புகளை உண்டாக்குவதாகவும் உள்ளது. பல பண முதலைகள் அரசுக்கு வரி செலுத்தாமல் டிமிக்கி கொடுக்கும்போது மிகச் சாதாரண மக்களிடமும் வரியைப் பிடுங்கும் வழியில் நிதி அமைச்சர் ஆர்வம் காட்டுகிறார். வரி என்பது மனிதனின் மிகவும் அடிப்படைத் தேவைக்கு செலவிடும் பணத்தை விடுத்து மிகையாக வரும் தொகைக்குத்தான் இருக்க வேண்டும். அதுதான் நியாயமானதும்கூட.சு சாமி கொஞ்சம் அவசரப்பட்டுள்ளார் என்றாலும் அவரது ஆதங்கம் தவறானதல்ல.

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
28-ஜூன்-201621:57:26 IST Report Abuse

Pannadai Pandianமோடி கைய தூக்கறதா பாத்தா "பிச்சு புடுவேன் பிச்சு"ன்னு சொல்றாப்ல இருக்கு.

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
28-ஜூன்-201618:42:53 IST Report Abuse

meenakshisundaramசு.சாமியை தூண்டி விட்டது யாரு? முக மீது சொத்துக்குவிப்பு வழக்கு போடாமல் அவர் ஜெ மீது வழக்கு போட காரணம் என்ன?இதில் முக வேறு மக்கள் அவசரப்படுகிறார்கள் என்கிறார்.முன்பு வழக்கை பல வருஷங்கள் இழுத்த்தடிப்பதாக சொன்னவர் இப்போ கோர்ட் அவசரப்படுகிறது,என்ன அவசரம் என்று சுப்ரீம் கோர்ட்டை குறை சொல்லுகிறார்.சு.சாமி மற்றும் முக இரண்டுமே நாடு கடத்தப்படவேண்டிய தீய சக்திகளே.

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X