பதிவு செய்த நாள் :
முதன் முறையாக பத்திரிகையாளரிடம் 'மன் கி பாத்!'

பிரதமராக பதவிக்கு வந்த நாள் முதல், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்த நரேந்திர மோடி, தற்போது தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருப்பதன் மூலம், தன் அரசியல் வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்.
காரணம், குஜராத் மாநில முதல்வராக இருந்த காலம் முழுவதுமே, அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமலே பதவி வகித்தார். தொடர்ந்து தேர்தலில் வெற்றியும் பெற்று வந்திருக்கிறார்.

 முதன் முறையாக பத்திரிகையாளள் 'மன் கி பாத்!'

முதல்வர் பதவி ஆகட்டும், பின்னர் பிரதமர் பதவி ஆகட்டும், மோடி, பொதுஜன தொடர்பு சாதனங்களை சிறிதளவும் நம்பாமல், தனி ஒரு மனிதனாக போட்டி அரசியலில் குதித்து தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார். ஏன், கட்சி தலைமைக்கு அப்பால் தொண்டர்கள், தொண்டர்களுக்கு அப்பால் வாக்காளர்கள் என்று நேரடி, அதிரடி அரசியலே அவரது, 'அக்மார்க்!'
இதன் காரணமாகவே, குஜராத்தில் ஆகட்டும், பின்னர் தேசிய அளவில் ஆகட்டும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்ல, தன் கட்சி தலைவர்களான கேசுபாய் படேல் மற்றும் அத்வானி போன்றோரையும் நிலைகுலைய வைத்தார்.
கடந்த, 2014 மக்களவை தேர்தல் சமயத்தில், பிரதமராவதற்கு மோடிக்கு கட்சியும், அதன் அமைப்பும், ஓட்டு வங்கியும் தேவைப்பட்டது என்பதை விட, மத்தியில் ஆட்சியைப் பிடிக்க, அவர்கள் அனைவருக்கும் மோடியின்


முகமும், தலைமையும் தேவைப்பட்டன.

ஐந்து மாநில தேர்தல்


கடந்த ஆண்டு, டில்லி மற்றும் பீஹார் மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வின் தோல்வி, சாதாரண மக்களின் மனநிலையில் மாற்றம் துவங்கி விட்டதை கோடிட்டு
காட்டியது. இந்த ஆண்டு நடைபெற்ற தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் கூட,காங்கிரஸ் ஆட்சி செய்த
மாநிலங்களில் மட்டுமே, பா.ஜ., கட்சி வெற்றி பெற்றது. அதிலும், கேரளா தனித்து நின்றது.அடுத்த ஆண்டு துவக்கத்தில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளன. தொடர்ந்து, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், மஹராஷ்டிரா போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து அனைத்திலும், சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கும்.
முன்னாள் பிரதமர் இந்திரா போல், தனி நபர் அரசியல் செய்து அதில் மாபெரும் வெற்றி கண்ட மோடி, அதிக காலத்திற்கு, தன் கட்சியின் தோல்வி, தன் தலைமைக்கு எதிரான
ஓட்டு என்று நம்பி, தொடர்ந்து அரசியல் செய்து வர முடியாது. அடுத்து வரும் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். மேலும், பிரதமரான காலத்தில் இருந்து, அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள், முழு வெற்றியை பெறவில்லை. இதன் தாக்கமும், உள்நாட்டு அரசியலில் தெரியத் துவங்கி விட்டது.

ஜாதக பலன்

கடந்த டிசம்பர் மாதம்அவர் மேற்கொண்ட அதிரடி பாகிஸ்தான் விஜயம், இரண்டே வாரங்களில், பதன்கோட் தீவிரவாத சம்பவத்தோடு முடிச்சிடப்பட்டது. தற்போது, அணு ஆயுத வர்த்தக குழுமத்தில் இந்தியாவை உறுப்பு நாடாகச் சேர்க்க முன்யோசனையோ, முன்னேற்பாடோ இன்றி, மோடியின் மகுடி நாதத்தையும், அவரது, 'ஜாதக பலனையும்' மட்டுமே

Advertisement

நம்பி, எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முன்னதாக, அவரது அமெரிக்க பயணத்தில், அந்நாட்டு தனியார் துறையினரிடம் இருந்து அணு உலை வாங்க, நம் அரசு முடிவு செய்தது. சியோல் கூட்டத்தில்,
இந்தியாவிற்கான அமெரிக்காவின் முஸ்தீபுகளையும், முயற்சிகளையும் கூட கொச்சைப்படுத்தி விட்டது.இது போதாது என்று, தன் மவுனத்தாலேயே, தன் அரசிற்கும், தலைமைக்கும் எதிரான அனைத்து விமர்சனங்களையும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் பக்கம் திருப்பி
விடுவதில், வெற்றி பெற்ற மோடி, தன் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமியை மவுனியாக்க, இப்போது வாய் திறந்து பேட்டி அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில், ஒருதலைபட்சமான சமூக வலைதளங்கள் மூலமோ அல்லது பொதுக் கூட்டங்கள்
மூலமாகவோ மட்டுமே மக்களுடன், 'உரையாடி' வந்த மோடி, தற்போது ஒரு பத்திரிகையாளரின் பேட்டிக்காவது பதில் சொல்ல முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதைத் தொடர்ந்து, முந்தைய பிரதமர்களை போல், அவ்வப்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் பிரத்யேக பேட்டி அளித்து வந்தால், அவர்களை போலவே,
மக்களின் மனதை, மோடியும் தீர்க்கமாக அறிந்து கொள்ள வழி ஏற்படும். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-ஜூலை-201618:15:57 IST Report Abuse

Malick Rajaஆக பேச பேச நாட்டின் பொருளாதாரம் முன்னேறுமா? அதனால்தான் ஒரு டாலருக்கு 70 ரூபாய் வரைக்கும் வந்துள்ளது? ஆமா ஒரு டீ இன்னும் இருபதுக்கு வரவில்லையோ /

Rate this:
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
28-ஜூன்-201622:36:31 IST Report Abuse

Sambasivam Chinnakkannuசொந்த பெயரை வெளியிட தயங்கும் பல அதி புத்திசாலிகள் கருத்து எழுதுவது ...அய்யோ ஐயோ ...... மோடி அவர்கள் போல் கட்சிக்குள் இந்திரா அம்மையாரை போல் ,ஜெயலலிதா அவர்களை போல் இருந்தால் தான் கட்சியும் , ஆட்சியும் நடத்த சுலபம் ,, கதைக்கு வருவோம் நமது மீடியாக்கள் எதை கேட்க வேண்டுமோ உதாரணமாக நம் நாட்டின் நிலைமையை பிரதமர் என்ற முறையில் எதற்கு பதில் எதிர் பார்க்க வேண்டுமோ அதை கேட்க வேண்டும் ,,அதை விட்டுவிட்டு அமெரிக்காவில் முஸ்லிம் எதிர்ப்புக்கு உங்கள் பதில் என்ன என கேட்டால் ... மீடியாக்கள் எதையும் கேட்கலாம் ,பேசலாம் என அதி மேதாவி தனமாக செயல்படுவதால் ,, தவிர்ப்பதில் தவறில்லை .....ஜனநாயகம் என அதிக உரிமை எடுத்துக்கொண்டால் ,,தங்கள் வீட்டிலேயே தங்களை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதை உணரவேண்டும் மீடியாக்கள் .

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
28-ஜூன்-201617:47:45 IST Report Abuse

இந்தியன் kumarகுஜராத்தி சிறிய மாநிலம் சீக்கிரத்தில் புனரமைக்க முடிந்தது , இந்தியா பெரிய நாடு 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியின் அவலத்தை 2 ஆண்டுகளில் சீரமைக்க முடியாது . ஆனால் மக்களின் மனதில் நம்பிக்கை உட்படுத்த வேண்டும் அதட்கு ஏழை மக்கள் பலன் பெரும் அளவில் திட்டங்கள் தீட்டப்பட்ட வேண்டும் மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் அதை ஓரளவாது நிறைவேற்றி நம்பிக்கை ஊட்ட வேண்டியது பாஜக அரசின் கடைமை.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X