தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, 14 மாவட்ட செயலர்களை சென்னைக்கு அழைத்து, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், இன்று விசாரணை நடத்தவுள்ளார்.
தே.மு.தி.க., தலைமையை விமர்சித்தும், அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் சொத்துகள் மற்றும் அறக்கட்டளை விவகாரங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில், ஒன்பது பக்க கடிதம் வெளியானது.இக்கட்சியைச் சேர்ந்த, 14 மாவட்ட செயலர்கள்,
இந்த கடிதத்தை எழுதியதாக, தகவல் பரவியது. இது, அக்கட்சி வட்டாரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, 14 மாவட்ட செயலர்களையும் அழைத்து,
இன்று விஜயகாந்த் விசாரணை நடத்த உள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்டமாவட்டங்களைச் சேர்ந்த, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இதில் பங்கேற்றவர்களும், கட்சி நிதி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இவர்களை, மாவட்ட செயலர்கள் துாண்டி விட்டு, கேள்வி கேட்க வைத்துள்ளதாக, விஜயகாந்துக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்களை, விஜயகாந்த் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்; பலர், அழைப்பை ஏற்கவில்லை.போனை
எடுத்தவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவர்களும், சரியான பதில்
அளிக்கவில்லை. எனவே, இந்த மாவட்ட செயலர்களையும், இன்று கட்சி தலைமை அலுவலகத்திற்கு வரும்படி, விஜயகாந்த்
அழைத்துள்ளார்.இதற்கிடையே, மாவட்ட செயலர்கள் சிலர், அந்த கடிதம் குறித்து, விஜயகாந்திடம், நேற்று தன்னிலை விளக்கம் அளித்தனர். மற்ற மாவட்ட செயலர்களிடம், இன்று விசாரணை நடத்திய பின், அந்த கடிதத்தை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, விஜயகாந்த் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
- நமது நிருபர்- -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (36)
Reply
Reply
Reply