சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணமானவருடன் ஓடிய தங்கையை வெட்டிக்கொலைசெய்த தீயணைப்பு வீரர்

Added : ஜூன் 27, 2016
Advertisement


திருநெல்வேலி: நெல்லை அருகே தங்கையை வெட்டிக்கொலை செய்த தீயணைப்பு படை வீரரை போலீசார் தேடிவருகின்றனர்.திருநெல்வேலி, மூன்றடைப்பை சேசர்ந்தவர் சிதம்பரம். அரசு பஸ் கண்டக்டர்.இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.மூத்த மகன் கிருஷ்ணராஜ் 27, சென்னையில் தீயணைப்பு துறையில் வீரராக பணியாற்றிவருகிறார்.இவரது மகள் மாலா, நெல்லையில் உள்ள பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி.,இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.இவர் தினமும் பஸ்சில், புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து கல்லூரிக்கு சென்றுவந்தார்.இதனால் புதிய பஸ் ஸ்டாண்டில் பழஜூஸ் கடையில் வேலைபார்த்த சார்லஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சார்லஸ் மருதகுளத்தை அடுத்துள்ள ஆழ்வாநேரியை சேசர்ந்தவர்.ஏற்கனவே திருமணமானவர். இரண்டு மனைவிகளை பிரிந்து மூன்றாவதுமனைவியுடன் வாழ்பவர். குழந்தைகள் உள்ளன. அண்மையில் மாலா, சார்லசுடன் வெளியூர் சென்றுவிட்டாராம்.இதுகுறித்து புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் விசாரித்து இருவரையும் மீட்டனர். பின்னர் மாலாவை பெற்றோருடன் அனுப்பிவைத்துள்ளனர். அண்மையில் விடுமுறையில் சொந்த ஊர் வந்த, கிருஷ்ணராஜ், தங்கை மாலாவுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். கிருஷ்ணராஜ் நேற்றுமுன்தினம் இரவில் வீட்டில் வைத்து இதுகுறித்து தங்கையிடம் பேசி புரிய வைத்துள்ளார். ஆனால் மாலா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமுற்றவர், தங்கையை அரிவாளால் சசரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.இதில் மாலா சசம்பவ இடத்திலேயே இறந்தார். மூன்றடைப்பு போலீசார் விசாரித்தனர். கிருஷ்ணராஜை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X