பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு

Added : ஜூன் 28, 2016 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும், ஏழாவது ஊதியக் கமிஷன் அறிக்கை, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஊதியக் கமிஷன் அறிக்கை மீதான தங்களுடைய பரிந்துரையை, அரசு செயலர்கள் குழு, மத்திய அரசிடம் அளித்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் மத்திய அமைச்சரவை
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு

புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும், ஏழாவது ஊதியக் கமிஷன் அறிக்கை, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதியக் கமிஷன் அறிக்கை மீதான தங்களுடைய பரிந்துரையை, அரசு செயலர்கள் குழு, மத்திய அரசிடம் அளித்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய நிதித் துறை செயலர் அசோக் லாவசா கூறியதாவது: மத்திய அமைச்சரவை செயலர் பி.கே.சின்கா தலைமையிலான, மத்திய அரசு செயலர்கள் குழு, தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
யாருக்கு, எவ்வளவு?* மத்திய அரசு ஊழியர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் திருத்தி அமைக்கப்படுகிறது* நீதிபதி ஏ.கே.மாதுார் தலைமையிலான, ஏழாவது ஊதியக் கமிஷன், தன் அறிக்கையை, கடந்த ஆண்டு இறுதியில் தாக்கல் செய்தது* இந்தாண்டு ஜன., 1ம் தேதி முதல், முன் தேதியிட்டு, இது நடைமுறைக்கு வரும்* நாடு முழுவதும், 50 லட்சம் ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவர்* சம்பள கமிஷன், 23.5 சதவீத உயர்வுக்கு பரிந்துரை செய்துள்ளது* இதனால், அரசுக்கு கூடுதலாக, 1.02 லட்சம் கோடி ரூபாய் செலவாகும்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madayan - Anaheim,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-201602:22:55 IST Report Abuse
madayan ஏதோ உருப்படியாக செய்தால் சரி
Rate this:
Cancel
svanan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூன்-201620:26:14 IST Report Abuse
svanan மறு பரிசீலனை செய்யுங்கள், நாட்டை முன்னேற்றும் வழியினை பற்றுங்கள், அரசு சம்பளம் , இதர தொழில்கள் இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது,
Rate this:
Cancel
Natrayan M - Dindigul,இந்தியா
28-ஜூன்-201620:21:15 IST Report Abuse
Natrayan M இதை அடுத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் அதிகம் ஊதியம் வழங்கவேண்டி வரும். ஊதியம் மட்டும் உயர்வதில்லை "லஞ்சமும்" அதே அளவிற்கு உயர்கிறது. பொது மக்கள்தான் இன்னலை சந்திக்கிறார்கள். சான்றிதல் வாங்குவதற்கு லஞ்சம் கொடுத்து அலையாய் அலைகிறார்கள். இறைவா இந்த அப்பாவி மக்களை இந்த லஞ்சப்பேய்களிடம் இருந்து காப்பாற்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X