புதுடில்லி : வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மத்திய வீட்டுவசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: சுய உதவிக் குழுக்களுக்கும், அவர்களது சுய வேலைவாய்ப்புக்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வங்கிகள் மேலும் கடன் வழங்க வேண்டும். வறுமையை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கம். ஏழைகளுக்கு மீன் வழங்குவதை காட்டிலும், அவர்களுக்கு மீன் பிடிக்க கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு விவகாரங்களையும் காஷ்மீருடன் இணைத்து பாக்., பேசி வருகிறது. பாக்.,கின் அர்த்தமற்ற இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீரை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.