பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
 * மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்

மத்திய அரசு ஊழியர்கள், 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

 * மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்


'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும்' எனக் கூறியுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களும் ஆயத்த பணியில் இறங்கி உள்ளன. எனினும், அரசு பேச்சுக்கு அழைத்தால், போராட்டத்தை வாபஸ் வாங்கும் முடிவில் உள்ளன.

இந்த ஊழியர்கள் முன் வைப்பது மொத்தம், 36 அம்ச கோரிக்கைகள். அவற்றில், 18 முக்கிய கோரிக்கைகள் வருமாறு:
1. ஆந்திர மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளம், 26 ஆயிரம் ரூபாய் போல, மத்திய அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்
2. கடந்த ஜனவரி, 1ம் தேதிக்கு பின், புதிதாக சேர்ந்த ஊழியர்களுக்கு, இந்த குறைந்தபட்ச ஊதியம் எத்தனை மடங்கு உயர்கிறதோ, அது போல ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கும், அந்த அளவுக்கு உயர வேண்டும்
3. ஆண்டு ஊதிய உயர்வை, 3 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
4. பதவி உயர்வின்போது, ஒரு மடங்கு ஊதிய உயர்வுக்கு பதிலாக, ஆண்டு

ஊதிய உயர்வு போல, இரு மடங்கு வழங்க வேண்டும்
5. ஆண்டு ஊதிய உயர்வு என்பது, ஜனவரி, ஜூலை என, இரண்டு முறை இருக்க வேண்டும். தற்போது, ஜூலை மட்டுமே உள்ளது
6. ஒருவரது பணி காலத்தில், ஐந்து பதவி உயர்வு வழங்க வேண்டும்; தற்போது, மூன்று பதவி உயர்வு முறையே உள்ளது
7. ஐந்து ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய மாற்றம் செய்ய வேண்டும்; தற்போது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளது
8. புதிய ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 4.82 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத்தின் கீழ் வருகின்றனர்; மொத்தம் உள்ள ஊழியர் எண்ணிக்கை, 32 லட்சம்
9. ஏழாவது ஊதிய குழு வழங்கியபரிந்துரை படி, தொழில்நுட்ப ஊழியர்களுக்கு போதிய பதவி உயர்வு வழங்காததை, மாற்றி அமைக்க வேண்டும்
10. ஓய்வு ஊதியம் என்பது, சம்பளத்தில், 50 சதவீதமாக வழங்கப்படுகிறது. இதை, 60 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும்
11. ஓய்வு ஊதியத்தில், ஒரு பகுதி, 12 ஆண்டுகளுக்கு கணக்கிட்டு முன் பணமாக வழங்கப்படுகிறது. அதன் பின், 15 ஆண்டுகள் கழித்து தான் முழு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை, 10 ஆண்டுகள் முடிந்தவுடன், முழு ஓய்வு ஊதியம் வழங்கும் முறையாக்க வேண்டும்
12. ஓய்வு ஊதியம் பெறுபவர்கள், ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது, இரண்டு வகையில் கணக்கிட்டு, அவர்களின் ஓய்வு ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பரிந்துரை உள்ளது. இரண்டில் எது லாபகரமானதோ அதை ஊழியருக்கு அமல்படுத்த வேண்டும்
13. போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டதை, மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருத்தி, 2014 - 15ல் இருந்தே அமல்படுத்த வேண்டும்
14. கிராமிய அஞ்சல் ஊழியர்களை,

Advertisement

அரசு ஊழியராக கருத வேண்டும். அதன்படி, சலுகைகள் வழங்க வேண்டும்
15. ஆயுத தளவாடங்கள், ரயில்வேஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது
16. அஞ்சல் துறையை, 'கார்ப்பரேட்' மயமாக்க எடுத்த முடிவை கைவிட வேண்டும்
17. நிறுத்தப்பட்ட, 52 படிகளை திரும்ப தர வேண்டும்
18. மத்திய அரசு துறையில், 6.64 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இது குறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:தற்போது, ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின், அடிப்படை சம்பளமாக, 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதை, 19 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி தர, மத்திய அரசு முன் வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.ஏற்கனவே அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆக, 15 ஆயிரத்து, 750 ரூபாய் பெறப்படும் நிலையில், 10 ஆயிரத்து, 250 ரூபாய் மட்டுமே கூடுதலாக கேட்கிறோம்.
மற்ற எந்தவொரு கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.
அமைச்சரவை செயலர் மட்டுமே, இதுவரை தொழிற்சங்கத்தினரிடம் பேசி உள்ளார். ஆனால், பொறுப்பான அமைச்சர்கள் தலைமையிலான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டால் மட்டுமே, கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்.எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, இன்று, அமைச்சரவை கூடி கலந்து ஆலோசிக்க உள்ளனர். அதன் பின், பேச்சுக்கு அழைக்க வேண்டும். அழைத்து பேசி, முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலே, வேலை நிறுத்தம் வாபசாக வாய்ப்புள்ளது. இல்லையெனில், திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். எனினும், அரசு பேச்சு நடத்தும் என்ற முழு நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர் என, ரயில்வே வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
b s jayaraman - coimbatore,இந்தியா
30-ஜூன்-201606:47:40 IST Report Abuse

b s jayaramanMr.thalaivan does not seem to have gone inside any of the government offices like taluk office civil supply office pwd municipality etc. just as a common man without support or recommation of any kind. or he must have benefactors all around in all the government offices he must have visited and it is possible that he could have his works done just by a snap or flick of his fingers. But his luck might be an exception and definitely not the rule. but the general perception of the people that 99% of those in government service are bribe takers using the weak and vulnerable position of those who go there for some service cannot be challenged or disputed. it is also a totally INVALID and UNACCEP argument that there are bribe takers as only because of bribe givers. NO people are constrained to shell out money as bribes just because the government employees know how to squeeze out money by bullying and dilly dallying tactics on the duties the are expected to perform Beeyesjay Cbe 641029

Rate this:
sultan - chennai,இந்தியா
29-ஜூன்-201619:52:06 IST Report Abuse

sultanஇங்கு பெரும்பாலும் தங்களை எல்லாம் தெரிந்தவர்கள் என்ற நினைப்புடன் நிறைய்ய அறிவிலிகள் கருத்து போட்டு இருக்கிறார்கள். உண்மையில் அரசு ஊழியர் யாரும் சொர்க்கத்தில் இருந்து பூமியில் குதிக்க வில்லை. அவர்கள் தங்கள் அறிவு மற்றும் உழைப்பிற்கே சம்பளம் கேட்கிறார்கள் ..எச்சி இலையை தூக்கி எறிந்தால் நாய்கள் மட்டுமே வரும். அதனால் தகுதியானவர்களுக்கு தகுதியான சம்பளம் வழங்குவதில் என்ன தவறு ஐயா. அப்புறம் லஞ்சம் வாங்குவது ஒன்றே அரசு ஊழியர்களின் வேலை என்பதை போல பிதற்றி இருக்கும் இவர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

Rate this:
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
01-ஜூலை-201602:12:19 IST Report Abuse

Jayaraman Pichumaniதமிழ்நாட்டுல வந்து பாருய்யா.உண்மை தெரியும். தகுதியானவர்களுக்கு தகுதியான சம்பளம் வழங்குவதில் என்ன தவறு ஐயா என்று கேட்டதிலிருந்து, டொரான்டோல அடிக்கிற குளிருக்கு செமத்தியா சரக்கு ஏத்திக்கிட்டு எழுதினாப்பல இருக்கு. ...

Rate this:
Yesveeorr - chennai ,இந்தியா
29-ஜூன்-201618:21:43 IST Report Abuse

Yesveeorrமுதலில் இரயில்வேயை தனியார் மயமாக்குங்கள். அவர்கள் இப்போது இருக்கும் ஊழியர்களில் 30% ஊழியர்களை வைத்துக்கொண்டு பத்து மடங்கு அதிக சேவையை தருவார்கள்.

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X