பதிவு செய்த நாள் :
தீவிரமடைகிறது !..
தெலுங்கானா நீதிபதிகளின் போராட்டம்
தனி ஐகோர்ட் கோரிக்கையும் வலுக்கிறது

தெலுங்கானா மாநில கீழ் கோர்ட் நீதிபதிகளாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும், நீதிபதிகளின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இந்நிலையில், தெலுங்கானாவுக்கு தனி ஐகோர்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

நீதிபதிகளின் போராட்டம்  தீவிரம்


ஆந்திரா பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம், கடந்த 2014ல் உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து, இரு மாநிலங்களுக்கும் இடையே, பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது.'முதல், 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத், பொது தலைநகராக இருக்கும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐதராபாத், தெலுங்கானா மாநில எல்லைக்குள் உள்ளது.
ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆந்திர மாநில ஐகோர்ட், 'ஐதராபாத் ஐகோர்ட்' என்று பெயர் மாற்றப்பட்டது. தற்போது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பொது ஐகோர்ட்டாக, இது உள்ளது. இந்நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, பல்வேறு மாவட்ட கோர்ட் உள்ளிட்ட கீழ் கோர்ட்களுக்கு, நீதிபதிகளை நியமிக்கும் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஆந்திராவுக்கு, 495 பேரும், தெலுங்கானாவுக்கு, 335 பேரும் நீதிபதிகளாக
நியமிக்கப்பட்டனர். தெலுங்கானாவுக்கு நியமிக்கப்பட்ட, 335 பேரில், 130 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.அதை தொடர்ந்து, 'ஆந்திராவைச் சேர்ந்தவர்களை, தெலுங்கானாவில் நீதிபதிகளாக நியமிக்கக் கூடாது' என, தெலுங்கானா நீதிபதிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தெலுங்கானா மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், தனி ஐகோர்ட் அமைக்க வேண்டும் என்றும், அவர்கள் கோரி வருகின்றனர்.

சிவில் மற்றும் மாவட்ட நீதிபதிகள் போராட்டத்தில் ஈடுபடுவது, நீதித் துறை வரலாற்றிலேயே, இதுதான் முதன்முறை. கடந்த 26ம் தேதி, 100க்கும் மேற்பட்ட நீதிபதிகள், மிகப்பெரிய பேரணியை நடத்தினர். அப்போது, ஆந்திரா மற்றும்
தெலுங்கானாவின் கவர்னரான, ஈ.எஸ்.எல்.நரசிம்மனை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.இதற்கிடையே, ஒழுங்கு நடவடிக்கையாக, தெலுங்கானா நீதிபதிகள் சங்க தலைவர் கே.ரவிந்தர் ரெட்டிமற்றும் பொதுச் செயலர் வரபிரசாத் ஆகிய, இரு நீதிபதிகளை, 'சஸ்பெண்ட்' செய்து, ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையே, சங்க துணைத் தலைவர் எஸ்.ஸ்ரீநிவாச ரெட்டி உட்பட, மேலும் ஒன்பது நீதிபதிகள், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட நீதிபதிகள், 15 நாட்கள் விடுமுறையில் செல்வதாக, நேற்று அறிவித்துள்ளனர்.ஏற்கனவே, தெலுங்கானா வழக்கறிஞர்கள் மற்றும் நீதித் துறை ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, தெலுங்கானாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கோர்ட் பணிகள் முடங்கியுள்ளன.

'மாநில அரசு தான்முடிவு செய்ய வேண்டும்'

இந்த பிரச்னை குறித்து, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சதானந்த கவுடா கூறியதாவது:நீதித் துறையின் சுதந்திரத்தில், நிர்வாகம் தலையிட முடியாது. இந்த பிரச்னையில், தேவையில்லாமல், மத்திய அரசைக் குறை கூறுவதை, தெலுங்கானா அரசு நிறுத்த வேண்டும். இதில், மத்திய அரசின் பங்கு எதுவுமே இல்லை.
மாநில முதல்வரும், ஐகோர்ட் தலைமை நீதிபதியும் இணைந்து, இதற்கான முடிவை எடுக்க வேண்டும். புதிய ஐகோர்ட்க்கு தேவையான வசதிகளை, மாநில அரசு செய்து கொடுத்தால், மற்றதைஐகோர்ட் கவனித்து கொள்ளும். இதில் தேவையில்லாமல், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிப்பதை, சகித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியில் போராட்டம்டி.ஆர்.எஸ்., அறிவிப்பு

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவின்

Advertisement

மகளும், லோக்சபா எம்.பி.,யுமான கவிதா கூறியதாவது:ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்த போதே, தெலுங்கானாவுக்கு தனி ஐகோர்ட்டை, மத்திய அரசு உருவாக்கியிருக்க வேண்டும். இது தொடர்பாக பலமுறை, பிரதமர் மோடியிடம், முதல்வர் சந்திரசேகர ராவ் முறையிட்டும், பலன் கிடைக்கவில்லை.
தங்களுடைய கூட்டணியில் உள்ள, ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் துாண்டுதலால் தான், தெலுங்கானாவின் கோரிக்கையை, பிரதமர் மோடி நிறைவேற்றுவதில்லை.
எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், டில்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, தெலுங்கானாவுக்கு தனி ஐகோர்ட் அமைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாநில மறுசீரமைப்பு சட்டம் மூலம், ஆந்திரா ஐகோர்ட்டே, புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கும், ஐகோர்ட்டாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், ஐதராபாத் ஐகோர்ட் தான், தெலுங்கானாவுக்கும் ஐகோர்ட்டாக இருக்கும். தற்போது, தெலுங்கானாவுக்கு என, தனி ஐகோர்ட் அமைக்க வேண்டும் என, போராட்டம் நடத்துகின்றனர். இது சம்பந்தமாக, மத்திய அரசு தான், தனியாக அறிவிப்பாணை வெளியிட வேண்டும். இதற்கு, ஐதராபாத் ஐகோர்ட் ஒப்புதலும் அவசியம்.பி.வில்சன் மூத்த வழக்கறிஞர், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் - நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
29-ஜூன்-201613:18:37 IST Report Abuse

rajan.  இந்த சீமானின் காங்கிரஸ் கைங்கரியம். ஒட்டு சீட்டுகளுக்காக போட்ட கூத்து ஆந்திராவை பிரித்தது.

Rate this:
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
29-ஜூன்-201611:55:29 IST Report Abuse

Durai Ramamurthyவழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தினந்தோறும் கண்டிக்கும் நீதிபதிகள், தங்களுக்கு பிரச்சினை என்றதும் போராட்டத்திற்கு சாலையை நோக்கி ஓடுவது சரியா?

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
29-ஜூன்-201609:00:53 IST Report Abuse

K.Sugavanamஇது நாட்டு நலத்துக்கு நல்லதல்ல..முளையிலேயே கிள்ளி எறிய படவேண்டும்..

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X