சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, 'உள்ளடி' வேலை பார்த்த புகாரில் சிக்கிய, மாவட்ட செயலர்கள், மூன்று பேருடைய பதவிகளை தி.மு.க., தலைமை பறித்துள்ளது.
துாத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் ராஜாராம், நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட செயலர் குத்தாலம் கல்யாணம், நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட செயலர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோரை, பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது தி.மு.க., தலைமை.
அவர்களுக்கு பதிலாக, முறையே சுப்பிரமணியன், நிவேதா முருகன், கவுதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான
அறிவிப்பை கட்சியின் பொது செயலர், அன்பழகன் நேற்று வெளியிட்டார்.
மாவட்ட செயலர் பதவி பறிப்புக்கு காரணங்கள்
*
துாத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி,
விளாத்திகுளம் ஆகிய, மூன்று தொகுதிகள் உள்ளன. அனைத்திலும், தி.மு.க.,
தோல்வி அடைந்தது.ஒட்டப்பிடாரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சியான புதிய தமிழகம் போட்டியிட்டது. கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர், 'தனது தோல்விக்கு, ராஜாராமும் காரணம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம் புகார் கூறினார். இதையடுத்து, ராஜாராம் மாற்றப்பட்டார்.
* நாகப்பட்டினம் வடக்கு மாவட்டத்தில் பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய, மூன்று தொகுதிகள் உள்ளன. மயிலாடுதுறையில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும், தன் மகன் அன்பழகன் போட்டியிட வேண்டும் என்பதற்காக, போராடி கல்யாணம், தொகுதியில் சரிவர வேலை பார்க்கவில்லை.
கூடவே, பூம்புகார் தொகுதியில் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும், சீர்காழியில் தி.மு.க., சார்பிலும்பெற்ற போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிராக பணியாற்றியதால், இருவரும் தோல்வி
அடைந்தனர். அன்பழகனும் வெற்றி பெறவில்லை. புகார்கள் குவிந்ததால், கல்யாணம் மாற்றப்பட்டு விட்டார்.
* நாகப்பட்டினம் தெற்கு மாவட்டத்தில் வேதாரண்யம், நாகப்பட்டினம், கீழ்வேளூர் ஆகிய, மூன்று தொகுதிகள் உள்ளன. அதில் வேதாரண்யத்தில் காங்கிரஸ் வேட்பாளர், நாகப்பட்டினத்தில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தோல்விக்கு, விஜயனே காரணம் என, வேட்பாளர்கள் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (24)
Reply
Reply
Reply