பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
2ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மெட்ரோ ரயில்

கடந்த ஆண்டில் இதே நாளில் தான், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது. ஆலந்துார் - கோயம்பேடு இடையே முதல் ரயிலை, பிரீத்தி என்ற பெண் ஓட்டுனர் இயக்கினார்.

 2ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மெட்ரோ ரயில்

இதையடுத்து, கோயம்பேட்டில் இருந்து ஆலந்துார் மார்க்கமாக, பயணிகள் சேவை துவங்கியது. மின்சார ரயிலில் மட்டுமே பயணித்து பழகிப் போன பயணிகளுக்கு மெட்ரோ ரயில் புதிய அனுபவத்தை

தந்தது. கட்டணம் சற்று அதிகம் என்கிற போதிலும், ரயில் முழுவதும், 'ஏசி' வசதி; பணத்தை செலுத்தினால் இயந்திரம் தரும் டிக்கெட்; ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டு;பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா போன்ற நவீன வசதிகள் அதை மறக்க செய்தன.
ஆரம்பத்தில், தினமும், 5,000 பேர் பயணித்தனர். தற்போது, 8,000 - 10 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரண்டாம் ஆண்டில், பயணிகளுக்கு கூடுதல் சேவை என்பதே எங்கள்இலக்கு. சின்னமலை - விமான நிலையம்; ஆலந்துார் - பரங்கிமலை இடையே உயர்த்தப்பட்ட வழித்தட பணி முழுவதும் முடிந்துவிட்டதால், இந்த ஆண்டில் அந்த வழித்தடங்களிலும் சேவை துவக்கப்படும். இதன் மூலம் விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் பயணம் சாத்தியமாகும். திருமங்கலம்

Advertisement

- எழும்பூர் இடையிலான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சேவையை, இரண்டாம் ஆண்டில் துவக்க உள்ளோம். இதன் மூலம் சுரங்க பாதையில் பயணம் என்ற பயணிகளின் கனவு நிறைவேறும்.இவ்வாறு அவர் கூறினார்.

-- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
29-ஜூன்-201617:13:26 IST Report Abuse

K.Sugavanam2 ஆம் ஆண்டு ஆரம்பம்..3 ஆவதற்குள் அடி வைக்கும் முன்னர் வேலைகள் முடியுமா?

Rate this:
Sanghimangi - Mumbai,இந்தியா
29-ஜூன்-201615:07:51 IST Report Abuse

Sanghimangiஇரண்டாவது வருடம் வந்தும் கூட, கூடுதலாக ஒரு ரயில் நிலைய நீட்டிப்பு பணிகள் கூட நடக்காதது ஏன் என்று கேக்கத்தான் ஆளில்லை..

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
29-ஜூன்-201611:56:24 IST Report Abuse

Chandramoulliஇரண்டாம் வருடத்தில் சேவை செய்யும் மெட்ரோ விற்கு வாழ்த்துக்கள் . மக்களுக்கு சேவை முழு அளவில் சென்று அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டணத்தில் கருணை காட்ட வேண்டும் .

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X