சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வினுபிரியா தற்கொலை: கண்காணிப்பு வளையத்தில் மூவர் : அலைபேசி வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்?

Added : ஜூன் 29, 2016 | கருத்துகள் (12)
Advertisement
வினுபிரியா தற்கொலை: கண்காணிப்பு வளையத்தில் மூவர் : அலைபேசி வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்?

சேலம் : 'பேஸ்புக்'கில் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படம் வெளியானதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மேட்டூரை சேர்ந்த நண்பர் உட்பட மூவர் போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அருகே மோட்டூர் புவனகிரி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை,46. அவரது மகள் வினுபிரியா,21. கடந்த ஜூன்,16ம் தேதி, பேஸ்புக்கில், வினுபிரியாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படம் பரவியது.இது குறித்து, புகார் அளித்த வினுபிரியாவின் பெற்றோர், போலீசாரால் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர். மனமுடைந்த வினுபிரியா நேற்று முன்தினம், வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்குப்பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, வினுபிரியாவின் உடலை வாங்க பெற்றோர் மறுத்தனர். பெற்றோருக்கு ஆதரவாக சில தன்னார்வ அமைப்புக்களும் களம் இறங்கின.
கலெக்டரிடம் புகார் : இரண்டாவது நாளாக, நேற்று உடலை வாங்க மறுத்த பெற்றோர், கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். சேலம் கலெக்டர் சம்பத், வினுபிரியாவின் பெற்றோரிடம்,'இது போன்று, மற்றொரு பெண்ணுக்கு நடக்காத வகையில், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து, டி.ஐ.ஜி.,யிடம் பேசி உள்ளேன். நீங்கள் அவரை சென்று பாருங்கள், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதோடு, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்' எனறு உறுதியளித்தார்பின், அங்கிருந்து கிளம்பி, அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சகோதரியாக கருதி நடவடிக்கை : இந்த பிரசனைக் குறித்து, பெற்றோரிடம் பேசி தீர்வு காண, சேலம் மாவட்ட எஸ்.பி., அமித்குமார் சிங்குக்கு, டி.ஐ.ஜி., நாகராஜ் உத்தரவு பிறப்பித்தார். சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி., அமித்குமார் சிங், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசியதாவது: பாதிக்கப்பட்ட பெண்ணை, என் சொந்த சகோதரியாக கருதி, நடவடிக்கை எடுக்கிறேன். உங்களிடம் இருந்து, அலைபேசி போலீஸ் வாங்கி இருந்தால், அது குறித்து விசாரணை நடத்தி, சஸ்பெண்ட் செய்கிறேன். இந்த வழக்கை நானே, என் நேரடி பார்வையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்கிறேன். குற்றவாளிகள் குறித்த விபரத்தை நானே உங்களின் வீட்டுக்கு வந்து தெரிவிக்கிறேன். இதை உறுதியாக செய்து கொடுப்பேன் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, பெற்றோர், வினுபிரியாவின் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர்.
சிக்கப் போவது யார்? : சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசார் முதல் கட்டமாக வினுபிரியாவின் அலைபேசி எண், பேஸ்புக்கில் உள்ள, ஐ.டி., ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தினர். இதில், ஏர்செல் நிறுவனத்தின் மொபைல் எண் மூலமே ஆபாச படம் பரப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, ஆறு பக்கத்திற்கு, ஐ.பி., எண்களை போலீசார் பெற்றுள்ளனர். அதன் மூலம், முதன் முதலில் ஆபாச படத்தை பரப்பியவர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, சென்னை, மும்பை, டில்லி, போலீசாரின் உதவியையும் நாடி உள்ளனர். ஐ.பி., எண்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் விசாரணையில், வினுபிரியாவின் காதலன் என கூறப்படும், மேட்டூரை சேர்ந்த முகம்மது சித்திக், இளம்பிள்ளையை சேர்ந்த, இரு தோழிகள் போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளனர்.
'மொபைல்' வாங்கியது யார்? : சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீசில், வினுபிரியாவின் தந்தை அண்ணாதுரை தலைமையில் புகார் அளிக்க சென்றனர். அப்போது, குற்றவாளிகளை கண்டறிய, புதிய மொபைல் போன் வாங்கித் தரும் படி, சைபர் க்ரைம் ஏட்டு சுரேஷ், கேட்டுள்ளார். அதை வாங்கிக் கொடுத்த போதும், பேஸ்புக்கில் வினுப்பிரியா மார்பிங் படம் பரவுவது தடுக்கப்பட வில்லை. வினுபிரியா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, பெற்றோர் அளித்த பகீர் குற்றச்சாட்டு குறித்து, நேற்று முன்தினம் மாலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், சைபர் க்ரைம் ஏட்டு சுரேஷ், புதிய மொபைலை லஞ்சமாக பெற்றது தெரிய வந்துள்ளது. இதனால், அவர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
உடல் தகனம் : சேலம் எஸ்.பி., அளித்த உறுதிமொழியை தொர்ந்து, வினுபிரியாவின் உடலை பெற்றுக் கொள்ள, பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று மாலை, அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மோட்டூரில், உடல் தகனம் செய்யப்பட்டது.

'3 நாளில் தடை' : சேலம் டி.ஐ.ஜி., நாகராஜன் கூறியதாவது:வினுபிரியாவின் பெற்றோர் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் போலீசார் மிகவும் வேகமாக செயல்பட்டு, 'பேஸ்புக்'கில் மார்பிங் படத்தை முதலில் தடை செய்யும் முயற்சியில் இறங்கினார். பொதுவாக, 'பேஸ்புக்'கில் படம் தடை செய்வதற்கு, குறைந்த பட்சம், 15 நாட்கள் ஆகும். போலீசாரின் தீவிர முயற்சியால், மூன்று நாளில் படம் தடை செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியும், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
'வழக்கு பாயும்' : வினுபிரியாவின் பெற்றோரின் புகார், வேண்டுகோளை ஏற்று, போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்கு துாண்டியதாகவும், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன் படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின், குற்றவாளி முடிவு செய்யப்படும் நிலையில், இந்த பிரிவுகளின் கீழ், வழக்கு பாயும் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வினுபிரியாவின் பெற் றோர், போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால், தற்கொலையை தடுத்து இருக்க முடியும். இது போன்ற பிரச்சனையில், போலீசார் பாதிக்கப்படும் பெண்களுக்கு மட்டுமின்றி, பெற்றோருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோதிலெட்சுமி, மாநில செயலர் ஜனநாயக மாதர் சங்கம்

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
30-ஜூன்-201600:53:53 IST Report Abuse
OUTSPOKEN மாநில செயலர், ஜனநாயக மாதர் சங்கம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: வினுப்ரியா போன்ற சம்பவங்கள் ஏற்படும்போது எல்லாம் கண்டனங்கள் எழுப்புவது, பத்திரிக்கைகளில் எழுதுவது உங்களைப்போன்ற மாதர் சங்கங்களுக்கு வாடிக்கை ஆகிவிட்டது. இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணத்தை கண்டறிந்து அது சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடம், பெண்களிடம் ஏற்படுத்தினாலே இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கமுடியும். Face book மற்ற சோசியல் மீடியாக்களின் தீமைகள், இன்றைய T.V. சீரியல்களால் ஏற்படும் சமூக சீரழிவு இவைகளால் குடும்பத்தில் ஏற்படும் சீரழிவுகளை மக்களிடம் எடுத்து கூறுவது சமூக ஆர்வலர்கள், மாதர் சங்கங்களின் இன்றைய முக்கிய கடமை. முடிந்தால், இந்த T.V. சீரியல்ஸ் எடுக்கும் தயாரிப்பாளர்கள், டைரக்டர்ஸ், நடிகர்களை third class citizen ஆக அரசாங்கம் அறிவித்து அவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகளை நிறுத்த சொல்லி போராடவும்.
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
29-ஜூன்-201614:06:01 IST Report Abuse
A. Sivakumar. பெற்றோரின் வேலைச் சூழல், பொருளாதார நிலை, பிள்ளைகளின் படிப்புச் சுமை, தொழில் நுட்ப வளர்ச்சி, இவைகளினால் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையே இடைவெளி அதிகரிக்குது. ஒரு பிரச்சினையில் சிக்கி, ஏற்கெனவே மனமுடைந்திருக்கும் பிள்ளைகளைப் பெற்றோரும் சேர்ந்து ஏசும் போது, தைரியமில்லாத பிள்ளைகள் இந்த மாதிரி துன்ப முடிவுகளை ஏற்கிற மாதிரி ஆகிப் போகுது. நீங்க பெத்த பிள்ளைகளை நீங்களே நம்பலேன்னா, அவுங்க வேற என்ன செய்வாங்க? பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுங்க, தைரியம் சொல்லுங்க. அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்?
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
29-ஜூன்-201611:43:32 IST Report Abuse
pradeesh parthasarathy ஜெயலலிதா மீது இளங்கோவன் ஒரு விமர்சனத்தை செய்த போது பொங்கி எழுந்த மாதர் சங்கங்கள் , வினு ப்ரியா விவகாரத்திலும், சுவாதி விவகாரத்திலும் போராட்டம் நடத்தாமல் ஒதுங்கி இருப்பது ஏன் .... இவர்கள் மாதர் சங்கம் என்ற பெயல் பலகையை தொங்க போட்டு விட்டு தங்களை விளம்பர படுத்த தான் அதை உபயோகிக்கிறார்கள்..... பாதிக்கப்படும் பெண்களுக்கு இவர்களால் எந்த சட்ட உதவி கூட அளிப்பதில்லை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X