சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வினுப்பிரியா படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவர் கைது

Updated : ஜூன் 29, 2016 | Added : ஜூன் 29, 2016 | கருத்துகள் (16)
Share
Advertisement
வினுப்பிரியா  தற்கொலை, ஒருவர் கைது

சேலம்: சேலத்தில் வினுப்பிரியா என்ற இளம்பெண் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக பேஸ்புக்கில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், பேஸ்புக் பக்கத்தில் மார்பிங் செய்யப்பட்ட, படத்தை மர்மநபர்கள் வெளியிட்டதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸ் எஸ்.பி., பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட வினுப்பிரியா பெற்றோர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்பாரைப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சுரேஷ் தறி நெய்யும் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன் வினுப்பிரியாவை சுரேஷ் ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இதை வினுப்பிரியா ஏற்கவில்லை.இருப்பினும் வினுப்பிரியா பெற்றோரிடம் சென்று பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது நண்பர் தனுஷ் உதவியுடன் வினுப்பிரியா உடலை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pillai Rm - nagapattinam,இந்தியா
29-ஜூன்-201618:02:40 IST Report Abuse
Pillai Rm சென்னை மேட்டர் என்ன நல்லவன் சார்
Rate this:
Cancel
Gopi - Chennai,இந்தியா
29-ஜூன்-201616:36:53 IST Report Abuse
Gopi என்னமோ அவன் விஐபி வீட்டு புள்ள அதனால காவல் துறை முதலில் கண்டுக்கலைன்னு நினைச்சேன். இந்த டுபாகூர் முதல்லயே புடிச்சிருந்தா என்ன
Rate this:
Cancel
manivannan - chennai,இந்தியா
29-ஜூன்-201614:55:28 IST Report Abuse
manivannan கடந்த ஆண்டு இதே காரணத்துக்காக கொலை செய்யப்பட்ட வினோதினியை கொன்ற நாயின் பெயரும் இதே கண்ராவிதான்.. இதுங்க குரங்கு மூஞ்சிகளுக்கு பொம்மைங்களாட்டம் இருக்கிற இஞ்சினியர் பொண்ணுங்க கேக்குது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X