புதுடில்லி:கடைகள், தியேட்டர்கள், வங்கிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை, 24 மணி நேரமும் இயங்கும் வகையிலான, புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை, நேற்று அனுமதி அளித்தது.
தற்போது, மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சில சேவைத் துறை நிறுவனங்கள் மட்டுமே, 24 மணி நேரமும் செயல்படுகின்றன. இந்நிலையில், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், சில முக்கிய முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டன.இதன்படி, கடைகள், தியேட்டர்கள், வங்கிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவையும், 24 மணி நேரமும் இயங்கும் வகையிலான,மாதிரி சட்ட மசோதாவுக்கு, அமைச்சரவை அனுமதி அளித்தது. இது குறித்து,
மத்திய தொழிலாளர் நல அமைச்சக செயலர் சங்கர் அகர்வால் கூறியதாவது:
இந்த சட்டத்திற்கு,பார்லிமென்டின் ஒப்புதல் தேவையில்லை. அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்த மாதிரி சட்டம் தொடர்பான ஆலோசனை கடிதம் அனுப்பி வைக்கப்படும். சட்டத்தை அப்படியே அமல்படுத்துவதும், மாற்றங்கள் செய்வதும், மாநில அரசுகளின் விருப்பத்தை பொறுத்தது.
அதே நேரத்தில், ஊழியர்களின் உரிமையை, இந்த சட்டம் பாதுகாக்கும்; இது நடைமுறைக்கு வந்தால், சேவைகள் துறையின் வருவாய் பெருகும். தயாரிப்பு துறை தவிர்த்து, இதர துறைகளை, இந்த மாதிரி சட்டம் கட்டுப்படுத்தும்; இது, அரசு அலுவலகங்கள் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு பொருந்தாது.
குறைந்தபட்சம்,10 ஊழியர்கள் அடங்கிய நிறுவனங்களை, மாதிரி சட்டம் கட்டுப்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய அம்சங்கள்
* கடைகள், வங்கிகள், தியேட்டர்கள், ஓட்டல்கள், நிதிச் சேவைகள், பொழுதுபோக்கு மையங்கள், 24 மணி நேரம் இயங்கலாம்
* இரவில் பெண்கள் பணிபுரிய அனுமதி உண்டு. ஆனால், அவர்களுக்கு போக்குவரத்து வசதி, குழந்தை பாதுகாப்பு பிரிவு மற்றும் கழிப்பறை வசதிகளை, நிறுவனங்கள் செய்து தர வேண்டும்
* தொழிற்சாலை ஆய்வாளர்களுக்கு பதிலாக, அனுசரணையாளர்கள் நியமிக்கப்பட்டு, நிறுவனர்கள் - ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்குவர்; கடைகளை ஆய்வு செய்வர்
* கிடங்குகள், 'பேக்கேஜ்' செய்யும் மையங்கள், 24 மணி நேரமும் இயங்க, முதன் முதலாக மாதிரி சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மின்வணிக நிறுவனங்கள் பயன்பெறும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (53)
Reply
Reply
Reply