அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு அறை ஒதுக்கும் விவகாரம்: சட்டசபை வளாகத்தில் சிக்கல் நீடிப்பு

Added : ஜூன் 30, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement
சட்டசபை வளாகத்தில், தாங்கள் கேட்டபடி அறை ஒதுக்காததால், புதிய அறை சாவியை, தி.மு.க.,வினர் வாங்க முன்வரவில்லை.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., 89 எம்.எல்.ஏ.,க்களுடன், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எனவே, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமர்ந்து, ஆலோசனை நடத்தும் வகையில், பெரிய அறை ஒதுக்கும்படி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்.அதன்

சட்டசபை வளாகத்தில், தாங்கள் கேட்டபடி அறை ஒதுக்காததால், புதிய அறை சாவியை, தி.மு.க.,வினர் வாங்க முன்வரவில்லை.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., 89 எம்.எல்.ஏ.,க்களுடன், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எனவே, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அமர்ந்து, ஆலோசனை நடத்தும் வகையில், பெரிய அறை ஒதுக்கும்படி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்.அதன் அடிப்படையில், கடந்த முறை, தே.மு.தி.க.,வுக்கு வழங்கப்பட்ட அறையுடன், காங்கிரஸ் அறையும் சேர்த்து ஒதுக்கப்பட்டது. இரண்டு அறைகளுக்கும், நடுவில் இருந்த தடுப்பு அகற்றப்பட்டது; ஆனால், தரை தளம் சமமாக இல்லை. அந்த அறை சாவியை பெற்றுக் கொண்டு, பழைய அறை சாவியை ஒப்படைக்கும்படி, சட்டசபை செயலக அதிகாரிகள், தி.மு.க.,வினரிடம் கேட்டனர். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். 'புதிதாக தயார் செய்யப்பட்ட அறை, போதுமானதாக இல்லை. இவ்விரண்டு அறைகளுக்கு அடுத்திருந்த அறை, சட்டசபை துணை செயலருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையையும் இணைத்து, ஒரே அறையாக மாற்றித் தர வேண்டும். தளம் சமமாக அமைக்கப்பட வேண்டும். அறையில் கழிப்பறை ஒன்று மட்டும் உள்ளது. கூடுதலாக, ஒரு கழிப்பறை கட்டித்தர வேண்டும். அப்போது தான் அந்த அறைக்கு செல்வோம்' என, தி.மு.க.,வினர் கூறிவிட்டனர். மேலும், 'நாங்கள் கேட்டபடி புதிய அறையை தயார் செய்து தரும் வரை, பழைய அறையை ஒப்படைக்க மாட்டோம்' எனவும் கூறி விட்டனர். இதனால், சட்டசபை செயலகம் சார்பில், காங்கிரஸ் கட்சிக்கு அறை ஒதுக்கப்படவில்லை. தி.மு.க.,வினர் கேட்டபடி, சட்டசபை செயலக அதிகாரிகள், அறையை தயார் செய்து கொடுப்பரா அல்லது மறுப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
30-ஜூன்-201607:55:45 IST Report Abuse
Rajendra Bupathi எல்லாம் அந்த அம்மாஜிக்கே வெளிச்சம்.வாழ்க எல்லாம் வாழ்க, அதுவும் வாழ்க இதுவும் வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X