பத்திரிகையாளர்கள், தினமும் ஏதாவது ஒரு கற்பனையை எழுதி, என்னை பேச வைக்க முயற்சிக்கின்றனர். விளம்பரங்களை தேடி, நான் போகவில்லை. விளம்பரம் தான், என்னை தேடி அயராது வருகிறது. அதனால் தான், தினமும் எனக்கு, 'டிவி' சேனல்கள் மற்றும் பத்திரிகை அலுவலகங்களில் இருந்து, 200க்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.
சுப்பிரமணியன் சாமி, மூத்த தலைவர், பா.ஜ.,
நேரு தான் காரணம்!
நாட்டின் முதல் பிரதமரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ஜவஹர்லால் நேரு எடுத்த தவறான முடிவு தான், காஷ்மீரின் ஒரு பகுதி, நம் கையை விட்டுச் சென்றதற்கு காரணம். இதனால் தான், காஷ்மீர் பிரச்னை, இப்போதும் நீடிக்கிறது. நேரு, அப்படியொரு முடிவை ஏன் எடுத்தார் என, தெரியவில்லை.
அமித் ஷா, தேசிய தலைவர், பா.ஜ.,
பொய் பிரசாரம் எடுபடாது!
கர்நாடகாவை தொழில்மயமாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, கர்நாடகாவில் தொழில் துவங்க, சாதகமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் வளர்ச்சி என்ற ரயிலில், 'இன்ஜின்' ஆக கர்நாடகா உள்ளது. பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், எங்களுக்கு எதிராக செய்யும் எந்த ஒரு பொய் பிரசாரமும், மக்களிடம் எடுபடாது.
சித்தராமையா , கர்நாடக முதல்வர், காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE