கெஜ்ரிவாலுக்கு குஜராத் தடை

Added : ஜூன் 30, 2016
Advertisement
புதுடில்லி : மாநில அரசு அனுமதி வழங்க மறுத்ததால், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் குஜராத் பயணம், திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக உள்ளார். குஜராத் மாநிலத்தில், ஆனந்திபென் படேல் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி உள்ளது. குஜராத்தில், இடஒதுக்கீடு கோரி, படேல் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேச விரோதமாக பேசியதால்,

புதுடில்லி : மாநில அரசு அனுமதி வழங்க மறுத்ததால், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் குஜராத் பயணம், திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.
டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக உள்ளார். குஜராத் மாநிலத்தில், ஆனந்திபென் படேல் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி உள்ளது. குஜராத்தில், இடஒதுக்கீடு கோரி, படேல் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேச விரோதமாக பேசியதால், படேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். குஜராத்தில், அடுத்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. எப்போதும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருந்து வரும் படேல் சமூகத்தினர், இப்போது, அந்த கட்சி மீது அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குஜராத்தில் ஆம் ஆத்மியை வலுப்படுத்துவதற்காக, அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய, கெஜ்ரிவால் திட்டமிட்டிருந்தார். படேல் சமூகத்தினரை சந்தித்து பேசி, அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்திருந்தார். இந்நிலையில், கெஜ்ரிவால் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு, குஜராத் அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால், கெஜ்ரிவாலின் குஜராத் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X