புதுடில்லி : குறைகள் மீது 10 நாட்களுக்குள் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி 'கெடு' விதித்துள்ளார்.
மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் நுகர்வோர் குறைதீர்வு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. டிக்கெட் முன்பதிவு செய்தல், ஓட்டல் அறை முன்பதிவு செய்தல் போன்ற ஆன்லைன் வர்த்தகங்கள் தொடர்பாக அதிகளவில் புகார்கள் வருவதை அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இதுகுறித்து கவலை தெரிவித்தார். இதற்கு தீர்வு காண மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்த மோடி, குறைகள் மீது 10 நாட்களுக்குள் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு 'கெடு' விதித்துள்ளார்.