பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை

Added : ஜூன் 30, 2016 | கருத்துகள் (13)
Share
Advertisement
திருவனந்தபுரம் : கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து கேரள போக்குவரத்து ஆணையர் தோமின் ஜே தச்சன்கரி தெரிவித்ததாவது: கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டில் 14,482 இருசக்கர வாகன விபத்துகள் நடந்தன. இதில் 1,330 பேர்
கேரளாவில் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை

திருவனந்தபுரம் : கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என கேரள அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள போக்குவரத்து ஆணையர் தோமின் ஜே தச்சன்கரி தெரிவித்ததாவது: கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டில் 14,482 இருசக்கர வாகன விபத்துகள் நடந்தன. இதில் 1,330 பேர் மரணமடைந்தனர். இதில் 80 சதவீதத்தினரின் உயிரிழப்புக்கு, விபத்தின் போது தலையில் பலத்த காயமடைந்தததே காரணம். இதனை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்குவதில்லை என கேரள அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில் வரும் ஆகஸ்ட 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-ஜூன்-201620:03:00 IST Report Abuse
தமிழ்வேல் வாசலிலேயே ஹெல்மெட் வாடகைக்கு விடுவானுவோ.
Rate this:
Cancel
Subbu - chennai,இந்தியா
30-ஜூன்-201616:06:12 IST Report Abuse
Subbu இந்த ஹெல்மெட் உயிரை காக்கும் என்பது உண்மையில் இல்லை. ஹெல்மெட் என்பது சாதாரண விபத்துகளில் மட்டுமே பயனுள்ளது, பெரும் விபத்துகளில் இது உடைந்து தலைக்காயம் ஏற்படுகிறது. இன்று பெரும்பாலான விபத்துக்கள் கண்ணை மூடிக்கொண்டு அதிவிரைவாக செல்வதால் ஏற்படும் விபத்துக்கள்தான், இதில் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும் உயிரிழப்புகள் ஏற்படும். மேலும் இந்த ஹெல்மெட் அணிவதால் காது கேட்காமை, தலையில் வியர்த்து தலைவலிகள், கழுத்துவலி, பின்வரும் வாகனத்தை பார்க்க முடியாதது போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதை அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடவேண்டும். வேண்டுமென்றல் ஹெல்மெட் இன்றி ஏற்படும் உயிரிழப்புகளை இன்சூரன்ஸ் கம்பெனிகள்,மற்றும் அரசுகள் எந்தவித இழப்பும் தரமாட்டோம் என அறிவிக்கலாம்.
Rate this:
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
30-ஜூன்-201613:42:34 IST Report Abuse
Durai Ramamurthy நான் எப்போதும் பாட்டிலில்தான் பெட்ரோல் வாங்குவேன் - இப்ப என்ன செய்விங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X