புதுடில்லி: மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது குறித்து பிரதமர் மோடியை பா.ஜ., தலைவர் அமித்ஷா சந்தித்து பேசினார். இதில் தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து துறை ரீதியாக ஆலோசனை நடத்தினர். அப்போது 75 வயதை தாண்டிய மூத்த அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பது குறித்து விரிவான ஆலோசனை நடந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் இருக்கப் போகிறது என வும் ,இது பிரதமரின் ஆப்ரிக்க பயணத்திற்கு முன்னர் இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து மூத்த அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.