புதுடில்லி: ஜூலை முதல் வாரத்தில் தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஜோகன்னஸ்பெர்க்கில் உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை முதல் வாரம் 5 நாள் அரசு முறைப்பயணமாக மொசாம்பிக், தான்சானியா, கென்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய 4 ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது , ஜோகன்னஸ்பெர்க் நகரில் இந்தியர்கள் மத்தியில் மோடி உரையாற்ற உள்ளார். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மோடி உரையாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.