பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஐதராபாத், பெங்களூரை தகர்க்க
பயங்கரவாதிகள் சதித் திட்டம்

திருப்பதி:ஐதராபாத், பெங்களூரு நகரங்களை தகர்க்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ள, திடுக்கிடும் தகவல் ெவளியாகி யுள்ளது. இதற்காக, மூன்று குழுக்களாக பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்த தகவலும் வெளியாகியுள்ளது.

 ஐதராபாத், பெங்களூரை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பைச் சேர்ந்த, 11 பேரை, தேசிய புல னாய்வு பிரிவான, என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று முன்தினம் து செய்தனர். அவர்களிடம் இருந்து, ஏராளமான வெடி பொருட்கள், மொபைல் போன் கள், சிம் கார்டுகள், லேப்டாப் ஆகியவை கைப் பற்றப்பட்டுள்ளன.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் ெவளியாகியுள்ளது.
இதுகுறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த அமைப்புக்கு ெவளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் அதிகஅளவில் கிடைத்து வருகிறது.

அந்த பணத்தை வைத்து, இவர்கள் ஆயுதங்களை வாங்கியுள்ளனர். மேலும், வெடி குண்டு தயார் செய்யும் தொழில்நுட்பமும் இவர்களுக்கு தெரியும்.
பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களை வெடி குண்டு வைத்து தகர்க்க, இந்த அமைப்பினர் திட்ட மிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அதனால், கைது செய்யப்பட்ட அனைவரையும், காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட்டின் அனுமதி கோரப் பட்டுள்ளது.

அனுமதி கிடைத்ததும், அவர்களை டில்லி அழைத் துச் சென்று விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது.

கோவிலில் மாட்டிறைச்சி...:என்.ஐ.ஏ., அதிகாரி கள் கூறியதாவது: ஐதராபாத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற

Advertisement

பாக்கியலட்சுமி கோவிலில், மாட்டிறைச்சியை வைத்து, மிகப்பெரிய மதக் கலவரத்தை ஏற்படுத்த, இந்த அமைப்பினர் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங் களில், இதற்கு முன்பும் கலவரங்கள் நடந்துள் ளன. அதுபோலவே, இந்தாண்டும் கலவரத்தை ஏற்படுத்த, இவர்கள் திட்டமிட்டுஇருந்தனர்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Bangalore,இந்தியா
02-ஜூலை-201616:59:58 IST Report Abuse

Rajeshநல்லவன் சார், நல்லவன் மாறி பேசுங்க. 6 AK 47 துப்பாக்கி, வெடி மருந்து இதல்லாம் உங்களுக்கு ஆயுதங்களாக தெரியவில்லையா ?? Published time of india news paper on 01st july with photo.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஜூலை-201617:35:00 IST Report Abuse

Endrum Indianபிடித்தல், ஆளை முடித்தல் என்று இருந்தால் தான் இது சிந்துபாத் தொடர்கதை போல் தொடராது. அழுகிய பழம் ஆப்பிளாக இருந்தாலும் மறுபடியும் அதை நல்ல பழமாக எவ்வளவு முயற்சி எடுத்தாலும் மாற்ற முடியாது. Once Attitude forms it can never be changed, it is the 4th stage of Human development 1) Environment Leads to Thinking 2) Thinking Leads to Action 3) Action Leads to Habit 4) Habit Leads to Attitude 5) Attitude Leads to Culture”

Rate this:
Rameeparithi - Bangalore,இந்தியா
01-ஜூலை-201613:28:11 IST Report Abuse

Rameeparithiசொந்த நாட்டிற்கே சூனியம் வைக்கும் இஸ்லாமியர்களே ஏன் இந்த ஆதங்கம் ? உங்கள் பெற்றோர்களை நீங்களே கொல்வது போன்ற கொடுமையை செய்ய எப்படி மனம் மாறுகிறீர்கள்? தீய சக்திகளின் பொய்யான பிரச்சாரங்களும் பை நிறைய பணமும் உங்களை முட்டாளாக்கி தேசத்தின் ஒற்றுமையை குறி வைப்பதை செய்ய உடந்தையாக இருக்க வேண்டாம்

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X