ஜெய்ப்பூர்:பாலியல்
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன், மகளிர் ஆணைய உறுப்பினர்,
எடுத்து கொண்ட, 'செல்பி'யால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில்,
முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள, அல்வார் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை, அவரது கணவன், தன்
சகோதரர் களுடன் சேர்ந்து, வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினான்.
அப்படியும் வரதட்சணை கிடைக்காததால், அந்த பெண்ணை,
அவரது கணவன், தன்
சகோதரர்களுடன் சேர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்தான்.
நெற்றியில் பச்சை: மேலும்,
அந்த பெண்ணின் நெற்றியிலும், கைகளிலும், மோசமான வார்த்தை களை பச்சை
குத்தியும், ருத்ரதாண்டவம் ஆடினர். பாதிக்கப்பட்ட அந்தபெண்,
போலீசில் புகார் அளித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்
பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து,
அம்மாநில மகளிர் ஆணையம் விசாரித் தது. அந்த பெண்ணை, மகளிர் ஆணைய தலைவர்
சுமன் சர்மா, உறுப்பினர் சோம்யா குர்ஜார் ஆகியோர் சந்தித்து, ஆறுதல்
கூறினர். அப்போது, அந்த பெண் ணுடன், சோம்யா குர்ஜார், மொபைல் போனில்,
'செல்பி' எடுத்தார்.
உடன்பாடு இல்லை: இந்தபுகைப்படம், சமூக
வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுமன் சர்மா கூறியதாவது: செல்பி எடுத்தது பற்றி
எனக்கு எதுவும் தெரியாது. பலாத்காரத்துக்குள்ளான
பெண்ணுடன், நான் பேசிய போது, சோமயா குர்ஜார், செல்பி எடுத்துள்ளார். இது போன்ற
செயல்களில், எனக்கு உடன்பாடு இல்லை. இது குறித்து,
எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கும் படி, குர்ஜாருக்கு
உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
பிரச்னை
விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து, இதுகுறித்து விளக்கம்
அளிக்கும்படி, ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (11)
Reply
Reply
Reply