பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
குறைந்தது!
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு
கறுப்பு பண நடவடிக்கைகள் எதிரொலி

ஜூரிச்:கறுப்புப் பண பதுக்கலுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் எதிரொலியாக, ஐரோப்பிய நாடான
சுவிட்சர் லாந்தின் வங்கிகளில், இந்தியர்கள் செய்யும் முதலீடு, மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

 சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு குறைந்தது:கறுப்பு பண நடவடிக்கைகள் எதிரொலி

'வரி சொர்க்கம்' என்றுஅழைக்கப்படும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி கிடையாது. இதனால் தான், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்து வந்தனர். நாளடைவில், இந்தியாவில் இருந்து கறுப்புப் பணம், சுவிஸ் வங்கிகளில் முதலீடு என்ற பெயரில் பதுக்கப்பட்டு வந்தது.

சிறப்பு குழு:
கறுப்புப் பண புழக்கத்தை தடுப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கறுப்புப் பணத்தை மீட்பதற்காக, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, 2011ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பின், கறுப்புப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அரசின்

இந்ததொடர் நடவடிக்கைகளின் எதிரொலியாக, 'சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு குறைந்துள்ளது' என, சுவிஸ் நாட்டின் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து, 2015ம் ஆண்டுக் கான அறிக்கையை, சுவிஸ் தேசிய வங்கி
வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில், சுவிஸ் வங்கிகளில், இந்தியர்களின்முதலீடு, 8,392 கோடி ரூபாயாக உள்ளது. 2006ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களின் முதலீடு, தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. 'இது முதலீடு கள் தான்; கறுப்புப் பணம் அல்ல' என, சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு அல்லது கறுப்புப் பணம் பதுக்கல் குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தால், அது குறித்த தகவல்களை, சுவிஸ் தற்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்ட தகவல்கள் இந்தியாவுக்கு கொடுக்கப் பட்டது.

ஒப்பந்தம்: கறுப்புப் பணத்துக்கு எதிரான மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக, சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களால் செய்யப்படும் முதலீடுகள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்கும் வகையில்,வரும், 2018ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்து கிடைத்துள்ள பல்வேறு ரகசிய பட்டியல்கள் குறித்தவிவரங்களை, மத்திய அரசு, தற்போது கோரி வருகிறது.

இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின்

Advertisement

முதலீடு குறைந்துள்ளது என்பது , மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள பலனாக கருதப்படுகிறது.

சுவிஸ் வங்கிகளில், இந்தியர்களின் முதலீடு, 2015 இறுதியில், 8,392 கோடி ரூபாயாக உள்ளது
* ஒரே ஆண்டில், 4,171 கோடி ரூபாய் குறைந்துள்ளது. கடந்த, 2014ல் இந்தியர்களின் மொத்த முதலீடு, 12 ஆயிரத்து, 563 கோடி ரூபாய்
* கடந்த, 1997ம் ஆண்டு முதல், முதலீடுகள் குறித்த தகவலை சுவிஸ் வெளியிடுகிறது. அதன்படி, இது தான் இந்தியர்களின் மிகவும் குறைந்தபட்ச முதலீடு
* கடந்த, 2006 இறுதியில், இந்தியர்களின் முதலீடு, 23 ஆயிரம் கோடியாக இருந்தது
* அதே நேரத்தில், 2011ல், 12 சதவீதமும், 2013ல், 42 சதவீதமும், இந்தியர்களின் முதலீடு உயர்ந்தது
* சுவிட்சர்லாந்து வங்கிகளில், உலகெங்கும் உள்ளவர்களின் மொத்த முதலீடு, 98 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 4 சதவீதம் குறைந்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
06-ஜூலை-201612:50:38 IST Report Abuse

Barathanஅதாவது ஒன்றை மக்கள் மறக்க வேண்டுமானால், apply delay tactics? people will forget any promise given by politician over period of time. That is what happening now. இன்னும் கொஞ்சம் நாட்களில் இந்த ஸ்விஸ் பங்குகளில் இந்தியர்களின் பணமே இல்லை என்று செய்தி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

Rate this:
Sambath Mkgs - chennai,இந்தியா
01-ஜூலை-201617:44:41 IST Report Abuse

Sambath Mkgsகருப்பு பணம் - நமக்கே இந்த அளவு தெரியும் பொழுது இந்திய அரசில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியாத????. வருமான வரியே கிடையாது சொன்னால் அனைத்தும் வர போவுது. இதுக்கு போய் ??????

Rate this:
MAN - chennai,இந்தியா
01-ஜூலை-201615:32:55 IST Report Abuse

MANமிஸ்டர். சேகர், அப்படியா அம்மா பணத்தெல்லாம் எங்க பதுங்கிறாங்கனு சொன்னு கொஞ்சம் நல்லாயிருக்கும்... உங்களை பாத்தாலும் பாங்க் மானேஜர் போல இருக்கு... அப்படியே சிங்கப்பூர் பாங்க் அட்ரஸ் கொடுத்தேங்கனா... உங்க ஊழல் கரை பாடிய தங்கம், உங்கள் குல சிங்கம் அம்மாவுக்கு உதவிய இருக்கும்.

Rate this:
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
02-ஜூலை-201608:33:29 IST Report Abuse

மதுரை விருமாண்டிகண்டைனர் லாரிகள் தான்.. ...

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X