பா.ஜ.,வின் முடிவுக்கு பின்பே, உ.பி., சட்டசபைத் தேர்தலில், பிரியங்காவை முன்னி லைப்படுத்து வதா வேண்டாமா என, தீர்மானிக்க, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
உ.பி.,யில்,
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலை மையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது.
இங்கு, அடுத்தாண்டு சட்ட சபை தேர்தல் நடக்க வுள்ளது. ஆளுங்கட்சியான
சமாஜ் வாதிக்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ், பா.ஜ., மற்றும் காங்., ஆகிய
கட்சிகள், பெரும் சவாலாக உள்ளன.
தேர்தல் வியூகங்களை
வகுத்து தருவதற்காக, பிரஷாந்த் கிஷோரை, காங்., மேலிடம்
பணிய மர்த்தியுள்ளது. இவர், கடந்த லோக்சபா தேர் தலில்,
பா.ஜ.,வுக்கும், பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளத்துக்கும்,
வியூகம் அமைத்து கொடுத்து, வெற்றியை பெற்றுத்
தந்தவர் உ.பி.,
மாநிலத்து க்கான கட்சியின் மேலிட பொறுப்பாளராக
நியமிக் கப்பட்டுள்ள குலாம்நபி ஆசாத்துடன் இணைந்து, பிரஷாந்த் கிஷோர்,
தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்.
ஆனாலும், தேர்தல் தொடர்பான,எந்தவொரு முக்கிய முடிவையும், இவர்கள் எடுக்கவில்லை.
குறிப்பாக,
முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து, காங்., சார்பில் இன்னும்
முடிவு செய்யப் படவில்லை.
'சோனியாவின் மகள் பிரியங்காவை, முதல்வர்
வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, உ.பி., காங்கிரஸ் கட்சியினர்
தொடர்ந்து வலியு றுத்தி வருகின்றனர்.
இதுகுறித்த இறுதி முடிவை சோனியா
தான் எடுப் பார் என்றாலும், பிரியங்கா வின் அரசியல் பிரவேசம் குறித்து,
மேலிட தலை வர்கள் மத்தியில் தீவிர ஆலோசனை நடக்கிறது.
இந்த
ஆலோசனையின் ஒட்டு மொத்த திசையும், பா.ஜ.,வை நோக்கியே மையம் கொண்டு
உள்ளது. 'முதல்வர் வேட்பாளரைபா.ஜ., அறிவிக்குமா இல் லையா; அவ்வாறு
அறிவித்தால் அந்த வேட் பாளர் யாராக இருக்க முடியும்; அவரை எதிர்கொள்ள
யாரை களமிறக்கலாம்' என்பதே, காங்கிரசின் தற்போதைய மவுனத்தின்
பின்னணி.
முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு
தேர்தலை சந்திக்க,
பா.ஜ., தயாரானால், பிரியங்காவை களமிறக்குவதற்கான வாய்ப்பு
அதிகமாக உள்ளது. 'பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக
அறிவிக்கலாமா வேண்டாமா; அவ்வாறு அறிவித்தால், வெற்றி வாய்ப்பு
எப்படி இருக்கும்' என, ஆய்வு செய்ய, மூன்று குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவில் உள்ளவர்கள், கட்சி
நிர்வாகிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும், இதுகுறித்து
கருத்து கேட்டு வருகின்றனர். ஆனாலும், பா.ஜ., எடுக்கப்போகும்
முடிவுக்கு பின்பே, பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதா
வேண்டாமா என்ற முடிவை, காங்., எடுக்கும் என தெரிகிறது.
- நமது டில்லி நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (45)
Reply
Reply
Reply