அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சந்திக்க மறுக்கும் விஜயகாந்த்
ம.ந.கூ., தலைவர்கள் கடுப்பு

தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை காப்பாற்ற, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். தேர்தலுக்கு முன்னும், பின்னும் பலர் வெளியேறி விட்ட நிலையில், மீதமுள்ள நிர்வாகிகளை அழைத்து பேசி, சரிக்கட்டி வருகிறார்.

 சந்திக்க மறுக்கும் விஜயகாந்த் ம.ந.கூ., தலைவர்கள் கடுப்பு

கட்சியை விட்டு விலகியவர்களும், விரக்தியில் நீடிப்பவர்களும், விஜயகாந்தின் கூட்டணி

முடிவையே குறை கூறுகின்றனர். மக்கள் நலக் கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தது தான் படுதோல்விக்கு காரணம் என, புலம்பிவருகின்றனர்.

இந்நிலையில், ம.ந.கூட்டணியுடன் சேர்ந்திருந்த, த.மா.கா., ஓடி விட்டது. ஆனால், விஜயகாந்த் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலிலும், தே.மு.தி.க., கூட்டணியை தொடர, ம.ந.கூ., தலைவர்கள் விரும்புகின்றனர். அது தொடர்பாக, விஜயகாந்தை சந்தித்து பேச, ம.ந.கூ.,தலைவர்கள் விரும்புகின்றனர். அதோடு, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை மையப்படுத்தி, விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடத்தும் யோசனையிலும் உள்ளனர்.

அதனால், விஜயகாந்தை சந்திக்க, கடந்த ஒரு வார மாக, ம.ந.கூ., தலைவர்கள் முயற்சித்து வருகின்ற னர். ஆனால், கட்சியில் மீண்டும் குழப்பம் ஏற்படும்

Advertisement

என்பதால், அவர்களை சந்திக்க, விஜயகாந்த் தயக்கம் காட்டுகிறார். விஜயகாந்தின் தயக்கம், ம.ந.கூ., தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் --

Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bobanna - Chennai,இந்தியா
01-ஜூலை-201620:31:07 IST Report Abuse

Bobannayes

Rate this:
kalyan - CHENNAI,இந்தியா
01-ஜூலை-201616:08:23 IST Report Abuse

kalyanதிருமா கோபாலபுரம் போவது உறுதி.. செங்கொடிங்க தோட்டத்துக்குப் போயிடும்.. வைகோ கள்ளத் தோணி ஏற வேண்டியது தான்.. மீதி யாரு? கேப்டன் தான்.. அவரு எங்கே போனாலும் அவங்களுக்கு ஆபத்துதான்.. அரிதாரம் வெளுக்கறதுக்குள்ளே சூட்டிங் முடிக்க வேணாமா? இப்பிடி அலங்கோலமானப்பறம் யாரு சீண்டுவாங்க?

Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
01-ஜூலை-201615:31:10 IST Report Abuse

Vaal Payyanகௌரவம் கௌரவம் னு என்ன எங்கே கொண்டு வந்து விட்டுட்டீங்கடா இன்னுமா இந்த சை கோ வ நம்புவீங்க ....

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X