அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இது தான் திறமைக்கு சாட்சியா?
ஜெ.,க்கு கருணாநிதி கேள்வி

சென்னை:'நிதிப் பற்றாக்குறை அதிகமுள்ள மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

   இது தான் திறமைக்கு சாட்சியா?ஜெ.,க்கு கருணாநிதி கேள்வி

அவரது அறிக்கை:'தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும், முதன்மை மாநிலமாக்குவதே என் லட்சியம்' என்று முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், தமிழகத்தின் உண்மையான நிதி நிலை என்ன

என்பதை, ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தொழில் உற்பத்தி தொடர்ந்து சரி கிறது; நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கிறது என்பதே ரிசர்வ்வங்கி கூறும் செய்தி. மாநிலங்களின் நிதிநிலை குறித்த கையேட்டை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை தொடர்பாக, விரிவாக ஆய்வு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இந்தியா வில், நிதிப் பற்றாக்குறை அதிகமுள்ள மாநிலங் களில், தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாகக் கூறியுள்ளது.

மின் வாரியம்போன்ற அரசு நிறுவனங்கள் வாங்கிய கடன்களையும் சேர்த்தால், தமிழக அரசின் கடன் சுமை, 4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். தி.மு.க., ஆட்சியில், 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியபோது, ஜெயலலிதா பேசிய

Advertisement

பேச்சு என்ன; சொன்ன காரணங்கள் என்ன; தற்போது, அவர் வாங்கி வைத்துள்ள கடன் சுமைக்கு, அளிக்கப் போகும் பதில் என்ன?

மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டியா; இதுதான் அ.தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமைக்கு சாட்சியா?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
01-ஜூலை-201620:01:21 IST Report Abuse

karunchilaiஇலவசங்களை அள்ளி வீசிக் கடன் கலாச்சாரத்தைத் துவக்கியவர் முகத்தான்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஜூலை-201617:54:52 IST Report Abuse

Endrum Indianதமிழகம் 4.02 லட்சம் கோடி 6 மாதம் முன்பு இப்பொது 4.6 லட்சம் கோடி ஆகியிருக்கும் என்று நம்புவோமாக. தமிழகம் எப்போதும் முன்னணியில் எதில்? கொலை, கொள்ளை, ஊழல், அறியாமை, அடிமைத்தனம் இவை அனைத்திலும்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஜூலை-201617:09:27 IST Report Abuse

இந்தியன் kumarஇன்னும் 5 வருடத்துக்கு கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டியதுதான் பாக்கி , அம்மாஜி எதற்கும் பதில் கொடுக்க போவது இல்லை.

Rate this:
மேலும் 79 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X