சென்னையில்
கொடூரமாக கொல்லப்பட்ட, மென்பொறியாளர் சுவாதியை, கொலையாளி, 17
நாட்களுக்கு முன் கன்னத்தில் சரமாரியாக அறைந்த அதிர்ச்சி தகவல்
வெளியாகி உள்ளது.
சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில்
தெருவைச் சேர்ந்தவர் சந்தான கோபால கிருஷ்ணன். இவரது இளைய மகள் சுவாதி,
24, மென்பொறியாளர். ஜூன், 24ல், சென்னை, நுங்கம்பாக்கம் ரயில்
நிலையத்தில் மர்ம வாலிபனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
கூடுதல்
கமிஷனர் சங்கர் தலைமையில், எட்டு தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி
வருகின்றனர். வழக்கு விசாரணையை, கமிஷனர் டி.கே.ராஜேந்திரன்
நேரடியாக கண்காணித்து வருகிறார்.
சுவாதி கொலை வழக்கில்,
நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் ஒட்டிய கட்டடங்கள், சுவாதியின் வீடு
உள்ள தெற்கு கங்கை அம்மன் கோவில் தெரு, அவர் பணியாற்றிய, பரனுார்,
'இன்போசிஸ்' நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி
உள்ள கொலையாளியின் உருவம் முக்கிய ஆதாரமாக கிடைத்துள்ளது.
'அவன்
தான் கொலைகாரன்' என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் தெளிவற்ற நிலையில் பதிவாகி இருந்த அவனது
உருவத்தை, ஐதராபாத்தில், அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன்
தெளிவுபடுத்தி உள்ளனர். நேற்று, அதிகாரப்பூர்வமாக அந்த படத்தை
வெளியிட்டனர்.
இந்த வழக்கில் போலீசார், நடத்திய விசாரணை:
*
சென்னையில் உள்ள சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. அவரது சகோதரி நித்யாவுக்கு தனியார் நிறுவன
பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
* சுவாதியின்
வீட்டில், அவர் பயன்படுத்திய, 'லேப்டாப்' கம்ப்யூட்டரில் உள்ள,
'ஹார்டு டிஸ்க்'கை போலீசார் எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்தி
வருகின்றனர்
* சுவாதி மற்றும் அவரது ஆண் நண்பரின் மொபைல்
போனுக்கு தொடர்பு கொண்டவர்களின் முழு விவரங்களையும் போலீசார்
சேகரித்தனர். எட்டு தனிப்படை போலீசாரும், 192 மொபைல் போன் எண்களை
ஆய்வு செய்து வருகின்றனர்
* இதுதவிர, சுவாதி மற்றும் அவரது ஆண்
நண்பருடன், 'பேஸ் புக், வாட்ஸ் ஆப்' தொடர்பில் இருந்தவர்களின் எண்கள்
சேகரிக்கப்பட்டுள்ளன
* அவர்கள் ஒவ்வொருவரிடமும் போலீசார்
கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம்
அதிகாலை, 4:00 மணி வரை, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், போலீஸ்
கமிஷனர் டி.கே.ராஜேந்திரன்விசாரணை நடத்தினார்
* கொலையாளி
எடுத்துச்சென்ற சுவாதியின் மொபைல் போன் எண், கொலை நடந்த, 24ம் தேதி
காலை, 6:30 மணியில் இருந்து, 8:30 மணி வரை, சூளைமேடு பகுதியில்,
'சுவிட்ச் ஆப்' செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால், கொலையாளிக்கு,
சூளைமேடு பகுதியில், யாரோ மர்ம நபர், இரண்டு மணி நேரம் அடைக்கலம்
கொடுத்து இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த
கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது
* சூளைமேடு பகுதியில்,
கொலையாளி, வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கலாம் எனவும்
கூறப்படுகிறது. இதனால், சூளைமேடு, செங்கல்பட்டு அடுத்த பரனுார்,
போரூர், பூந்தமல்லி பகுதியில், கொலையாளியின் புகைப்படத்தை,
போலீசார் வீடு வீடாக காட்டி சோதனை நடத்தினர்
* சுவாதி பெங்களூரு
மற்றும் மைசூரில்
பணி யாற்றியபோது, பயன்படுத்திய பழைய மொபைல் போன்
எண்களையும் போலீசார் சேகரித்துள்ளனர். வெளியூரில் குறைந்த
நபர்களி டமே அவர் பழகி இருக்க கூடும் என்பதால், அவர்களில் கொலைகாரன்
எண் இடம் பெற்றுள்ளதா என, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்
*
கொலையாளி வெளி மாநிலங்களுக்கு தப்பித்து இருக்கிறானா என, சென்னை
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், தி.நகர்
பேருந்து நிலையம் என, நகரின் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு
கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளி உருவம்
பதிவாகவில்லை
என்பதால், அவன் சென்னையில் தான் பதுங்கி இருக்க கூடும் என, போலீசார்
நம்புகின்றனர்
*
கொலையாளி பயன்படுத்திய அரிவாள், கர்நாடக மாநிலத்தில்
பயன்படுத்தக்கூடியது என்பதால், கொலையாளி பெங்களூருவை
சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், போலீசார் நம்புகின்றனர்
●
கொலையாளி, ஒரு மாதமாக பின் தொடர்ந்து வந்ததை, தன் தோழி மற்றும் ஆண்
நண்பரிடம் சுவாதி தெரிவித்துள்ளார். 'போலீசாரிடம் அவனை மாட்டி
விடலாம்' என, தோழி தெரிவித்த போதிலும், சுவாதி அலட்சியமாக இருந்தது
ஏன்? அப்படியானால் அவன் ஏற்கனவே அறிமுகமானவனா என்ற கோணத்திலும்
போலீசார் விசாரித்து வருகின்றனர்
● சுவாதி பெங்களூருவில்
பணியாற்றிய போது, அவன் ஒருதலையாக காதலித்து இருக்கலாம்; சுவாதி
காதலை ஏற்காததால், கொன்று இருக்கலாம் எனவும்
சந்தேகிக்கப்படுகிறது
● இதற்கிடையில், சென்னை,
சூளைமேட்டைச் சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் தமிழ்ச்செல்வன்,
போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் போலீசாரிடம் கூறி இருப்பதாவது: செங்கல்பட்டில்
உள்ள, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். தினமும் சுவாதி
பயணிக்கும், ரயிலில் தான் நானும் வேலைக்கு செல்வேன்.
ஜூன், 7ம் தேதி,
ரயிலுக்காக சுவாதி காத்திருந்தபோது, மாநிறம் உடைய வாலிபன் ஒருவன்,
சுவாதியிடம் தகராறு செய்தான். அந்த பெண்ணின் கன்னத்தில், அவன் மாறி
மாறி அறைந்தான். ஆனால், அந்த பெண் எதிர்ப்பு ஏதும் காட்டவில்லை.
கொலை
நடந்த அன்றும், நான் ரயில் நிலையத் தில் இருந்தேன். அவரை கொன்றவனும்,
அன்று கன்னத்தில் அறைந்த வாலிபனும் ஒரே மாதிரியானவன் போல இருந்தான்.சுவாதியை
கொன்ற பின் அவனை, ரயில் நிலையத்தில் இருந்த நாங்கள் துரத்தினோம். அவன்,
தண்டவாளத்தை கடக்கும் போது கீழே விழுந்து எழுந்து ஓடிவிட்டான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்ச்செல்வன்
அளித்துள்ள தகவல், போலீசாருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மாலை, போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் செய்தியாளர்களிடம்
கூறுகையில், ''சுவாதி கொலை வழக்கு சரியான கோணத்தில் சென்று கொண்டு
இருக்கிறது. கொலையாளியை விரைவில் பிடித்து விடுவோம்,'' என்றார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (56)
Reply
Reply
Reply