அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமூக விரோதிகளை அடக்க வேண்டும்: வாசன்

Added : ஜூலை 01, 2016
Share
Advertisement
சென்னை : 'சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: பெண் இன்ஜினியர் சுவாதி கொலை செய்யப்பட்டு, ஆறு நாட்கள் ஆகியும், இன்னும் குற்றவாளியை போலீஸ் கண்டுபிடிக்காமல் இருப்பது, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலையில் மர்மம் நீடிக்கிறது. சுவாதியின் கொலை சம்பந்தமாக, தவறான

சென்னை : 'சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: பெண் இன்ஜினியர் சுவாதி கொலை செய்யப்பட்டு, ஆறு நாட்கள் ஆகியும், இன்னும் குற்றவாளியை போலீஸ் கண்டுபிடிக்காமல் இருப்பது, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலையில் மர்மம் நீடிக்கிறது. சுவாதியின் கொலை சம்பந்தமாக, தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களை, போலீசார் கண்டறிந்து, தண்டனை அளிக்க வேண்டும். ரயில், பஸ் நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, தமிழகம் முழுவதும் உள்ள சமூக விரோதிகளை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X