புதுடில்லி : ''அரசியல் காரணங்களுக்காக, நான் அவர்களுக்கு தேவை. அதனால் என் மீது குற்றம் சாட்டுவார்கள்; ஆனால் அதை நிரூபிக்க மாட்டார்கள்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார். ராபர்ட் வாத்ரா மீது பல்வேறு நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு உள்ள ஹரியானா மாநிலத்தில், வாத்ரா மீது நில மோசடி புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி எஸ்.என்.திங்க்ரா குழு, தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து, 'பேஸ்புக்' சமூகதளத்தில் ராபர்ட் வாத்ரா கூறிஉள்ளதாவது:அவர்களுடைய அரசியல் பலன்களுக்கு நான் தேவை. என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்; ஆனால் அதை நிரூபிக்க மாட்டார்கள்; அவர்களால் நிரூபிக்கவும் முடியாது. இது, பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு வாத்ரா கூறிஉள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, நீதிபதி திங்க்ரா குழு தன்னிடம் விசாரணை நடத்தாமலேயே அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக வாத்ரா கூறினார்.
இதுகுறித்து நீதிபதி திங்க்ரா கூறுகையில், ''அரசு அதிகாரிகளை மட்டுமே நேரில் சந்தித்தேன். வாத்ரா மற்றும் தனிநபர்கள், நிறுவனங்களுக்கு கேள்விகள் அனுப்பப்பட்டன; ஆனால் பதில் வரவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE