பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர்
சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

 ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை

கங்கைக் கரையில்.:உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். அதற்காக, சிலையுடன் கன்னியாகுமரியில் இருந்து, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார்.

அங்கு கங்கைக் கரையில், ஹர் கி பவுடி என்ற இடத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக் கூடாது என, சிலர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து, சங்கராச்சாரியா சவுக் என்ற

இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது.

அங்கு கடந்த வெள்ளிக் கிழமை சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், விழாவை திடீரென புறக்கணித்தார். பெயரளவுக்கு நடந்த விழாவில்,மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

பிரச்னை:இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வ மாக நிறுவப்படாமல், ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது.திருவள்ளுவர், தலித் சமுதாயத் தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரை யோரத் தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்ற னர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர்.

திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவி லில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர்.

'உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!'

Advertisement

இது குறித்து, நமது நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டி:சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர்.

தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
03-ஜூலை-201612:21:27 IST Report Abuse

Krish Samiவள்ளுவர் அனைத்து பிரிவுகளையும் கடந்தவர். உலகு, உலகு என்று மீண்டும் மீண்டும் சொன்னவர், இந்த உலகுக்கே உரியவர். ஆனால், உத்தரகாண்டை மட்டும் குறை சொல்வதில் பொருள் இல்லை. இந்தியா முழுவதுமே நம்மில் பலரும் வளர வேண்டியவர்களே. ஒருவர் ஒலிம்பிக் மெடல் வென்றால் கூட, கொலை கேசில் மாட்டினாலும் கூட, ஜாதி பார்த்து கருத்து சொல்லும் கூட்டம் பெரும்பான்மையானவர்கள். இதற்கு மருந்தும் வள்ளுவரே அனைத்து CBSE பள்ளிகளிலும், நாடு முழுவதும், திருக்குறளை , மய்ய அரசு உடனே அறிமுகப்படுத்தலாம். ஆங்கிலம், ஹிந்தி அல்லது சோசியல் ஸ்டடிஸ் பாட பிரிவில் கொண்டு வர முடியும். ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் போதிக்கலாம். ஒன்று படுவோம். உலகை வெல்வோம்.

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
03-ஜூலை-201612:17:28 IST Report Abuse

Krish Samiதருண் விஜய்க்கு பாராட்டுகளை சொல்லும் நேரத்தில், ஜாதியில் சுருங்கி போகும் மனிதர்களுக்கு, மகாத்மா காந்தியும், நோபெல் பரிசு வென்ற Albert Schweitzerம் சொன்னதை மேற்கோள் காட்டலாம். ஆங்கிலத்திலேயே தருகிறேன். யாராவது அங்கு இதை கொண்டு செல்லலாம். "I wanted to learn Tamil, only to enable me to study Valluvar’s Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him" - Mahatma Gandhi. "There hardly exists in the literature of the world a collection of maxims in which we find such lofty wisdom as in Thirukkural." - Dr. Albert Schweitzer, Nobel Laureate. இது போன்று பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
03-ஜூலை-201611:54:45 IST Report Abuse

Krish Samiஅநியாயம். ஒருவர் மதம், இனம், மொழி என்னவாக இருந்தால் என்ன? 2000 வருடங்களுக்கு முன்னர் நம்மை உய்விக்க வந்த பெருமகனுக்கும் ஜாதியை திணிக்கும் அறிவிலிகளை நாம் என்னவென்பது? "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்று சொன்ன வள்ளுவருக்கே இந்த நிலைமையா? அநியாயம்.

Rate this:
மேலும் 60 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X