தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு | Dinamalar

தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு

Added : ஜூலை 02, 2016 | |
தூத்துக்குடி:தன்னுடன் சேர்ந்து வாழ வரும் படி கோர்ட் உத்தரவுடன் வந்த திருச்சி பெண் வக்கீல் திருச்செந்தூர், வீரபாண்டியபட்டிணத்தில் உள்ள கணவர் வீட்டு முன்பாக இரண்டாவது நாளாக தர்ணா போராட்டம் செய்து வருகிறார். திருச்சி ஸ்÷ட்டபாங்க் காலனியை சேர்ந்தவர் பர்ஜானா பேகம், 27. 2007 ல் இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பணியாளராக பணியாற்றி வந்தார். அப்போது கோவை தனியார்


தூத்துக்குடி:தன்னுடன் சேர்ந்து வாழ வரும் படி கோர்ட் உத்தரவுடன் வந்த திருச்சி பெண் வக்கீல்
திருச்செந்தூர், வீரபாண்டியபட்டிணத்தில் உள்ள கணவர் வீட்டு முன்பாக இரண்டாவது நாளாக தர்ணா
போராட்டம் செய்து வருகிறார்.
திருச்சி ஸ்÷ட்டபாங்க் காலனியை சேர்ந்தவர் பர்ஜானா பேகம், 27. 2007 ல் இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பணியாளராக பணியாற்றி வந்தார். அப்போது கோவை தனியார் நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டிணத்தை
சேர்ந்த வள்ளிநாயகம் மகன் சத்தியக்குமார்,30, தனியார் தொழிற்சாலையில் தொழில் பழகுனராக இருந்தார். பர்ஜானாவுக்கும், சத்தியக்குமாருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்த காதலுக்கு சத்தியகுமார் வீட்டில் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
காதல் திருமணம்: இந் நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சத்தியக்குமார் இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறினார். இவர்கள் இருவருக்கும் 2009 நவ., 21 ல் திருச்சியில் முஸ்லிம்
மதப்படி, பர்ஜானா உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர். இதன் பின்பு இருவரும் தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கினர். அங்குள்ள தனியார்
நிறுவனத்தில் சத்தியக்குமார் பணியாற்றினார்.
இரண்டாம் திருமணம்: 2011 ல் சத்தியக்குமார் தான் பணியாற்றும் நிறுவனத்தில் ஆந்திராவிற்கு
மாற்றியுள்ளனர். பர்ஜானா சட்டக்கல்லூரியில் படிக்க விருப்பம் தெரிவித்ததால், சட்டக்கல்லூரியில் படிக்க அனுப்பினார். இந் நிலையில் சத்தியக்குமார் தனது வீட்டிற்கு சென்ற சாமாதானம் செய்து கொண்டார். இந் நிலையில் மேலகூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து
தகவல் அறிந்த பர்ஜானா செப்., 20ல் கணவரை தேடி வாகைக்குளம் வந்தார். அங்கு இல்லாததால், இரண்டாம் திருமணம் செய்தது தெரியவந்தது. தற்போது சத்தியக்குமார் பிரேமா தூத்துக்குடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
நடவடிக்கை இல்லை: இது குறித்து பர்ஜானா தூத்துக்குடி, புதுக்கோட்டை அனைத்து மகளிர்
போலீசில் புகார் செய்தார். இருதரப்பினரையும் அழைத்து பேசிய போலீசார் பர்ஜானாவுடன்
குடும்பம் நடத்தும் படி தெரிவித்தனர். செப்., 28 ல் பர்ஜானாவுடன் சேர்ந்து வாழ்ந்த
சந்தியக்குமார் அடுத்த நாள் தனது தந்தைக்கு உடல்நலமில்லை பார்த்து வருகிறேன் என்று
சென்றவர் திரும்பவும் வரவில்லை. இது குறித்து கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் புகார்
கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
கோர்ட் உத்தரவு: இந் நிலையில் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பர்ஜானா வக்கீல் பட்டம்
பெற்றார். 2015 ல் திருச்சி மகிளா கோர்ட்டில் இது குறித்து வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தனது கணவர் சத்தியக்குமார் தன்னோடு சேர்ந்து வாழ உத்தரவிடும் படி
கேட்டிருந்தார். இதன் படி 2016 ஜூன் 28 ல் திருச்சி மகிளா கோர்ட் பர்ஜானாவுடன் சத்தியக்குமார் சேர்ந்து வாழ உத்தரவிட்டது.
தொடரும் போராட்டம்: கோர்ட் உத்தரவுடன், கணவர் சத்தியக்குமார் வீடான வீரபாண்டிய
பட்டிணத்திற்கு வருகை தந்தார். இவர் வந்ததையறிந்த சத்தியக்குமார் வீட்டார் ,வீட்டிற்குள்
உள்ளேய உள்ளனர். யாரும் வெளியே வரவில்லை. பர்ஜானா தனது கணவர் சத்தியக்குமார் தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன்பு இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு நாம் தமிழர் கட்சியினர், வி.சி.க.,வினர் ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
----

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X