சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சுவாதி கொலையில் குற்றவாளி சிக்கியது எப்படி?

சென்னை : சென்னையில் மென்பொறியாளர் சுவாதியை கொடூரமாக கொன்ற கொலையாளி ராம்குமாரை, செங்கோட்டை அருகே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரை கண்ட கொலையாளி, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் மென் பொறியாளர் சுவாதி, கடந்த 24ம் தேதி(ஜூன் 24) சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்மநபரால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையில் 8 தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் செங்கோட்டை அருகே தனது தாத்தா வீட்டில் மறைந்திருந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரியை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு ராம்குமார் முயற்சி செய்துள்ளான். இதனையடுத்து செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவனுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது.
கொலையாளி சிக்கியது எப்படி?
ஒருதலைக்காதல்:
ராம்குமார் செங்கோட்டை அருகிலுள்ள மீனாட்சிபுத்தை அடுத்த பன்பொழி கிராமத்தை சேர்ந்தவன். ஆலங்குளம் பொறியியல் கல்லூரியில் பி,இ., படித்தவன். வேலை தேடி சென்னை சென்ற ராம்குமார், சூளைமேட்டிலுள்ள மேன்ஷன் ஒன்றில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளான். அப்போது சுவாதியுடன் ராம்குமாருக்கு ஒருதலைக்காதல் ஏற்பட்டுள்ளது. ராம்குமார் 3 மாதமாக முயற்சித்தும் தனது காதலை சுவாதி ஏற்காததால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளான். இதற்கு அவனது நண்பர் ஒருவரும்உதவி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிப்படை:
இக்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கொலையாளி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த போதும், தெளிவற்ற உருவமாக இருந்ததால் அவனைஅடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.


இதனையடுத்து கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டது.மொபைல் போன் மாயம்:
கொலை செய்யப்பட்ட சுவாதியின் மொபைல் போனை கொலையாளி சம்பவ இடத்திலிருந்து எடுத்து சென்றுள்ளான். இதனையறிந்த போலீசார், சுவாதியின் நண்பர் ஒருவரின் எண்ணிலிருந்து சுவாதியின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., ஒன்றை உடனடியாக அனுப்பியுள்ளனர். கொலை நடந்த நாளன்று காலை 8 மணி முதல் 8.10 மணி வரை சுவாதியின் மொபைல் போனை கொலையாளி ஆன் செய்து வைத்துள்ளான். அப்போது எஸ்.எம்.எஸ்., டெலிவரி ஆகியுள்ளது. இதனை வைத்து ஆய்வு செய்த போலீசார், செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியில் இருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து கொலையாளியின் புகைபடத்தை கொண்டு, சூளைமேடு பகுதியில் வீடுவீடாக போலீசார் சோதனை நடத்தினர்.
மேன்ஷன் காவலாளி கொடுத்த துப்பு:
கொலையாளியின் புகைபடத்தை பார்த்த சூளைமேடு பகுதியிலுள்ள மேன்ஷன் காவலாளி ஒருவர்போலீசாரிடம், துப்பு கொடுத்துள்ளார். போலீசாரிடம் கொலையாளி ராம்குமார் போல் உள்ளான் எனவும், நெல்லையை சேர்ந்தவன் எனவும் காவலாளி தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையான நாளிலிருந்து ராம்குமார் மேன்ஷனிலிருந்து மாயமாகி இருப்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து நெல்லை விரைந்த தனிப்படை போலீசார், ராம்குமாரின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
தற்கொலை முயற்சி:
நள்ளிரவில் போலீசாரை கண்ட ராம்குமார், தனது கையிலிருந்த பிளேடால் கழுத்தை அறுத்துள்ளான். உடனடியாக அவனை கைது செய்த போலீசார், செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை நடந்த போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை போலீசார் கைபற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


ஒப்புதல்:சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை:ராம்குமாரின் கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அறுவை சிகிச்சைக்குப்பின் ராம் குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை :ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாய் மற்றும் அவரது சகோதரி, சகோதரர் ஆகிய 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளைமேடில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை அழைத்து வர முடிவு:ராம்குமாரை சென்னை அழைத்து வர போலீசார் முடிவு செய்துள்ளனர். அவன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்களை தர போலீசார் மறுத்துள்ளனர்.
அறை எண் 404:ராம்குமார் சூளைமேடு சவுராஷ்டிராநகரிலுள்ள மேன்ஷன் ஒன்றில் அறை எண் 404ல் கடந்த 3 மாதங்களாக வசித்து வந்துள்ளான். இவன் தங்கியிருந்த மேன்ஷனுக்கும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கும் அரை கிலோ மீட்டர் துாரமே உள்ளது. அதேபோல் அவனின் மேன்ஷனிலிருந்து சுவாதியின் வீட்டிற்கும் அரை கிலோ மீட்டர் துாரம் தான். சுவாதி வெளியில் வரும் போது மேன்ஷனிலிருந்து பார்க்கும் வாய்ப்பு அவனுக்கு அதிகமிருந்திருக்கும். கொலையான அன்று காலை சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தனது ரயிலுக்காக காத்திருந்த போது, காலை 6.45 மணியளவில் அங்கு வந்த ராம்குமார், சுவாதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். பின் சுவாதியை தாக்கிய ராம்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை வெட்டி படுகொலை செய்துள்ளான்.
வெளியேற தடை:ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனில், தற்போது விசாரணை நடைபெற்று வருவதால், மேன்ஷனலிருந்து மற்றவர்கள் வெளியேற போலீசார் தடை விதித்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v v chalapathy - Hyderabad,இந்தியா
03-ஜூலை-201611:46:35 IST Report Abuse

v v chalapathyதீர்ப்பு தண்டனை நீடிக்க வேண்டாம் மிக வேகமாக செய்ய வேண்டும் இந்த ஆண்டுக்குள் அறிவிக்க வேண்டும்

Rate this:
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
03-ஜூலை-201609:45:17 IST Report Abuse

மு. செந்தமிழன்ஒவ்வொரு நாளும் சென்னையில் எவ்வளவோ கொலை கொலைகள் நடக்கின்றன இந்த கொலை மட்டும் ஏன் இவ்வளவு விஸ்வரூபம் எடுத்தது. இளம்பெண் என்பதால? இல்லை பொது இடத்தில் கொலை நடந்தது என்பதால?

Rate this:
Citizen_India - Woodlands,இந்தியா
03-ஜூலை-201611:57:02 IST Report Abuse

Citizen_Indiaஎனக்கும் இதே குழப்பம் தான், சாதாரணமாக விஐபி குடும்ப நபர்கள் பாதிப்புக்குளானால் தான் காவல் துறை இந்த அளவு தீவிர வேட்டையில் இறங்கும். எப்படியோ காவல் துறையின் செயல்பாடு மனமிகுந்த பாராட்டுக்கள். காவல்துறை எப்போதும் இதுபோல கண்ணியமாகவும் சிறப்பாகவும் நடவடிக்கை எடுத்து மக்களிடம் இழந்த நற்பெயரை மீட்க்கவேண்டும்....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஜூலை-201612:39:48 IST Report Abuse

Kasimani Baskaranபட்டப்பகலில் ஒரு கொலை செய்து தப்பி ஓடி ஒரு வாரம் ஊடகங்களுக்கு தீனி போட்டு காவல்த்துறைக்கு ஒருவனான தண்ணீர் காட்ட முடியும் என்ற ஒரு கேவலம்... அது மட்டுமல்ல ராம்குமார் ஸ்வாதியின் தொலைபேசியை எடுத்துப்போகவில்லை என்றால் பல மாதங்கள் சென்று பிடித்திருக்க வாய்ப்பு இருந்தது... பல பாடங்கள்- (1) பொது இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்கவேண்டும்... (2) சமூக ஊடகத்தில் கவனமாக நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்... (3) பக்கத்தில அக்கிரமம் நடந்தால் உடனே காவலத்துறையை அழைக்க வேண்டும் (4) ஆங்காங்கு முகத்தை வைத்து ஆளை அடையாளம் காணக்கூடிய காமிராக்களை பொருத்த வேண்டும்......

Rate this:
selvin - tirunelveli,இந்தியா
03-ஜூலை-201612:51:46 IST Report Abuse

selvinசென்னை மாவட்டத்தில் உள்ள சென்னை வாசிகளுக்கு தென் மாவட்டங்கள் என்றாலே ஒரு அலர்ஜி போல. சென்னை மாவட்டக்காரர்கள் தென் மாவட்டக்காரர்களை ரௌடி போல பார்க்கிறார்கள்.அவர்களுக்கு சுயநலம் தவிர பொதுநலம் தேவை இல்லை....

Rate this:
jagan - Chennai,இந்தியா
03-ஜூலை-201601:17:12 IST Report Abuse

jaganதுப்பு குடுத்த காவலாளிக்கும் பாதுகாப்பு கொடுங்கள்... மாவட்டத்து மக்கள் ரொம்ப பாசாக்காரகள் (இவன் கூட்டாளி கிடைக்கும் வரை)

Rate this:
மேலும் 91 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X