தேடி வந்த அரிதாரம் ! | Dinamalar

தேடி வந்த அரிதாரம் !

Added : ஜூலை 03, 2016 | |
மின்மினியாய் சிறகடிக்கும் புன்னகை, பாதம் தொட முயலும் கூந்தலின் வனப்பு, நடிப்பின் மொழியை உச்சரிக்கும் விழிகள், என கார்மேகத்தில் வரைந்த வானவில் ப்ரீத்தி. கல்லூரி படிகளை மிதிக்கையில், நடிப்பு பல்கலையை திரைகளில் எட்டிப்பார்த்த காலம் கனிந்து, இப்போது அதிலே ஒட்டிக்கொள்ளும் அதிர்ஷ்ட தேவதையாக மாறியுள்ளார்.நடிப்பு, பயிற்சி என இக்கலை சார்ந்து துளி அனுபவமும் இல்லாமல்,
தேடி வந்த அரிதாரம் !

மின்மினியாய் சிறகடிக்கும் புன்னகை, பாதம் தொட முயலும் கூந்தலின் வனப்பு, நடிப்பின் மொழியை உச்சரிக்கும் விழிகள், என கார்மேகத்தில் வரைந்த வானவில் ப்ரீத்தி. கல்லூரி படிகளை மிதிக்கையில், நடிப்பு பல்கலையை திரைகளில் எட்டிப்பார்த்த காலம் கனிந்து, இப்போது அதிலே ஒட்டிக்கொள்ளும் அதிர்ஷ்ட தேவதையாக மாறியுள்ளார்.

நடிப்பு, பயிற்சி என இக்கலை சார்ந்து துளி அனுபவமும் இல்லாமல், இத்துறைக்கே ஆர்வமில்லாமல் இருந்த இவரை 'மதுரை அண்ணா நிலையம்' சினிமாவின் கதாநாயகியாக உயர்த்தி காட்டியிருக்கிறார் மதுரை இயக்குனர் செந்தில்குமார்.

'மதுரை விடிஞ்சா போச்சு' படத்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை கதாநாயகியாக்கி திரையுலகின் கவனத்தை ஈர்த்த இந்த இயக்குனர், ப்ரீத்தியை கதாநாயகியாக மாற்றிக்காட்டியதிலும் ரகசியங்கள் ஒளிந்து கிடக்கின்றன. ''பெண்களிடம் அச்சம், நாணம் போன்ற விஷயங்கள் துடைக்கப்பட வேண்டியவை என்பது தான் இந்த கதாநாயகியின் தேர்வு'' என

புன்னகைக்கிறார் செந்தில் குமார்.

'மதுரை அண்ணா நிலையத்தில்' 5 கதாநாயகிகள். அதில் ஒருவரான ப்ரீத்தி, மதுரை மங்கையர்க்கரசி கல்லுாரியின் மூன்றாம் ஆண்டு கணித மாணவி. அவரிடம் ஒரு மினி நேர்காணல்.

* வாய்ப்பு எப்படி?

கதாநாயகி வாய்ப்பு பற்றி பெற்றோரிடம் இயக்குனர் தெரிவித்தார். முதலில் நான் தயங்கினேன். பின் கிடைத்த வாய்ப்பை ஏன் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் நடிக்க வைத்தது.

* கேமரா பார்வையில் முதல் அனுபவம்?

அழுகையாக தான் வந்தது. நடக்க தெரியாதவங்களிடம் வண்டி ஓட்டச் சொல்லுவது போலத்தான் இருந்தது. இயக்குனர் அளித்த தைரியத்தால் படிப்படியாக நடிப்பில் தேறினேன்.

* கேரக்டர்?

கலகலவென இருக்கும் கிராம பெண் கேரக்டர். அதில் பல காட்சிகள் சோகமும், அழுகையும் உண்டு. இதுபோன்ற கேரக்டர்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

* மாணவி டூ ஹீரோயின்?

நான் இப்போதும் கல்லுாரி மாணவி தான். 2ம் ஆண்டு செமஸ்டர் லீவில் தான் நடித்தேன். நான் சினிமாவில் நடிப்பது, எனது கல்லுாரி தோழிகள் ஒருவருக்கு கூடத் தெரியாது. நான் ஹீரோயின் ஆயிட்டேன் என 'பந்தா' காட்டவில்லை. காட்டவும் மாட்டேன்.

* கூந்தல் ரகசியம்!

அது ரகசியம். ஒரு வேளை அதுகூட சினிமா பக்கம் இருந்திருக்கலாம்.

* அடுத்த சினிமா?

சினிமா மட்டும் எனது இலக்கு அல்ல. ஆசிரியை ஆகவேண்டும் என்பது தான் எனது கனவு. ஆனால் இதுபோல் கிராமிய கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்.

* பொழுதுபோக்கு?

சிறுவயது முதல் நடனம் தான். பள்ளி, கல்லுாரி அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் எனது பங்களிப்பு இருக்கும். அப்புறம் சினிமா பார்ப்பது.

* சினிமாவில் கற்றுக்கொண்டது?

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் திறன் வேண்டும். அது என்னில் இல்லாமல் இருந்தது. இப்போது அந்த திறனையும், தன்னம்பிக்கையையும் வளர்த்து கொண்டேன். மற்றவர்களுக்கும் நான் சொல்லும் ஆலோசனையும் இது தான், என்கிறார்.

அண்ணன், தம்பி பாசத்தை காட்டும் 'மதுரை அண்ணா நிலையம்' படத்தில் மதுரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரும் இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நாயகிகளும் மாணவிகள் என்பது கூடுதல் தகவல்.

- வாழ்த்த 97905 89902ல் ஹலோ சொல்லலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X