சிக்ஸ்பேக் ரகசியம் - அதர்வா அசத்தல்

Added : ஜூலை 03, 2016
Advertisement
தமிழ் சினிமாவில் 'பாணா காத்தாடி'யாய் நுழைந்து, 'பரதேசி'யாய் நடிப்பில் முத்திரை பதித்து, 'ஈட்டி' போல சென்று கொண்டிருக்கும், கல்லுாரி பெண்களின் கனவு நாயகன் நடிகர் அதர்வா. 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை திருமங்கலத்தில் முகாமிட்டார். கிடைத்த ஓய்வு நேரத்தின் போது தினமலர் வாசகர்களுக்காக அவருடன் பேசியதிலிருந்து...* தந்தை முரளி
சிக்ஸ்பேக் ரகசியம் - அதர்வா அசத்தல்

தமிழ் சினிமாவில் 'பாணா காத்தாடி'யாய் நுழைந்து, 'பரதேசி'யாய் நடிப்பில் முத்திரை பதித்து, 'ஈட்டி' போல சென்று கொண்டிருக்கும், கல்லுாரி பெண்களின் கனவு நாயகன் நடிகர் அதர்வா. 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை திருமங்கலத்தில் முகாமிட்டார். கிடைத்த ஓய்வு நேரத்தின் போது தினமலர் வாசகர்களுக்காக அவருடன் பேசியதிலிருந்து...* தந்தை முரளி நடிகர் என்பதால் நடிப்பில் ஆர்வமா?சிறுவயதில் நடிப்பு குறித்து எந்த புரிதலும் இல்லை. கேமரா முன் நிற்கவே பயமாக இருக்கும். அப்பா படப்பிடிப்புகளுக்கு ஐந்து முறை தான் சென்றுள்ளேன். பள்ளி படிப்பை முடித்த பின் தான் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்போதும் எந்த துறையை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். அப்பாவே ஒரு முறை, நடிக்க விருப்பமா,'' என்றார். பிறகு தான் நடிக்க துவங்கினேன்.* முதல் சினிமா குறித்து ?பள்ளி காலங்களில் வகுப்பை 'கட்' அடிப்பதற்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்பேன். நாடகம், நடனம் என ஒன்று விடமாட்டேன். பிறந்தது முதல் சினிமாவை அருகில் இருந்து பார்த்ததால் நடிப்பு எளிமையாக வந்தது. பாணா காத்தாடி வாய்ப்பு வந்ததும் நடித்தேன்.* ஈட்டியில் தடகள வீரராக மாறிய நீங்கள் விளையாட்டு வீரரா?கால்பந்து விளையாடியதுண்டு. தடகள போட்டிகளில் பங்கேற்றதில்லை. 'ஈட்டி' படத்திற்காக 18 மாதங்கள் தடகள வீரராக மாறினேன். அதுமட்டுமின்றி எங்கு படப்பிடிப்பு இருந்தாலும், உடற்பயிற்சிக்கு ஒன்றரை மணி நேரம் ஒதுக்கி விடுவேன்.* படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்தீர்களா?சினிமாவிற்காக தான் ஜிம் சென்று சிக்ஸ்பேக் தோற்றத்தை பெற்றேன். உடலை உறுதியாக 'பிட்' ஆக வைத்தால் தானே அழகு.* பரதேசியில் இயக்குனர் பாலா கடிந்து வேலை வாங்கினாரா?அந்த தகவல் வதந்தி தான். படத்திற்கு என்ன தேவையோ அதை எதிர்பார்ப்பார். அதுவரை விடமாட்டார். அந்த படம் வறுமையின் கொடுமையை பிரதிபலித்தது. நடிகர்கள் மீது அக்கறை மரியாதை கொண்டவர் பாலா.* பாலாவின் அடுத்த படத்திலும் நடிக்கிறீர்களாமே?பாலா சார் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன். திரைக்கதை முடிந்தவுடன் தான் நான் அவரது படத்தில் இருக்கிறேனா என தெரியும்.* மாடர்ன் கேரக்டர்களில் நடிக்கும் நீங்கள், பரதேசி போன்ற படங்களில் நடிக்கிறீர்களே?படத்திற்கு எது தேவையோ அதை செய்வேன்.* அப்பா படங்களில் எந்த படத்தை ரீமேக் செய்ய விருப்பம்?அப்பா படத்தை ரீமேக் செய்ய மாட்டேன். அவர் அவராக இருக்க வேண்டும். அவரது படங்களுக்கு என ஒரு வரவேற்புள்ளது.* பிடித்த இயக்குனர் யார்?இயக்குனர் மணிரத்னம் சாரை பிடிக்கும். அவரது இயக்கத்தில் நடிக்க ஆசை.* அதிக இடைவெளி விட்டு நடிக்க காரணம்?ஒரே நேரங்களில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிப்பதில் சிரமம் உள்ளது. நல்ல படங்களை தேர்வு செய்ய இடைவெளி அவசியம். அடுத்தாண்டு நான்கு படங்கள் வெளிவரும்.* திருமணம் குறித்து?(சிரித்தபடி) தற்போது அந்த எண்ணம் இல்லை.* மதுரை?மதுரை மக்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள். இங்கு கிடைக்கும் கறிதோசையை விரும்பிசாப்பிடுவேன். மதுரையை களமாக கொண்ட படத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X