சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையை போல் மேலும் ஒரு சம்பவம் ;காதலை ஏற்க மறுத்த பெண் கொலை

Added : ஜூலை 03, 2016 | கருத்துகள் (31)
Advertisement
காதலை ஏற்க மறுத்த பெண் கொலை

ஐதராபாத்: ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். சென்னையில் சுவாதி கொல்லப்பட்டது போல் மேலும் ஒரு இளம் பெண் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பைன்சியா பகுதியை சேர்ந்தவர் சந்தியா வயது 19. இவர் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த மாணவன் மகேஷ். இவன் சந்தியாவை ஒரு வருடம் பின்தொடர்ந்து வந்துள்ளான். இவன் பல முறை தனது காதலை சந்தியாவிடம் வெளிப்படுத்தியுள்ளான். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளான். ஆனால் சந்தியா காதலை ஏற்கவில்லை.

இதனால் ஆத்திரமுற்ற மகேஷ் சந்தியா வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது கத்தியால் கழுத்தை அறுத்தான். அதில் அந்த பெண் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானர். தகவல் அறிந்த போலீசார் மகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் சுவாதி கொலை நடந்த பரபரப்பு அடங்குவதற்குள் தெலுங்கானாவில் மேலும் ஒரு பெண் ஒரு தலைக்காதலால் கொல்லப்பட்டுள்ளார்.

சேலத்தில் சிறுமி கொலை: சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தெலுங்கனூர் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-201601:15:57 IST Report Abuse
மலரின் மகள் நீதி மன்றங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவி வேண்டும். அவர் என்ன மாதிரி தகவல்களை தரவில்லை. அதை எப்படி பெறுவது. அவரின் விசாரணையின் குறைகளை நிவர்த்தி செய்வது எல்லாம் சொல்ல வேண்டும். வெறுமனே அவர் தந்த தகவல்கள் விசாரித்த முறையில் உள்ள குறைகள் மற்றும் சரியான ipc இல்லை என்பன போன்ற நொண்டி சாக்குகளால் குற்றவாளி தப்பிக்க விடக்கூடாது, ஒரு நிரபாரதியுமே தண்டனைக்குள்ளாகவே கூடாது என்ற நல்ல நோக்கத்தில் குற்றவாளிகளுக்கு சந்தேகத்தின் பயனையும் அளித்து பாதிக்கப் பட்டவர்கள் மேலும் சங்கடத்திற்குள்ளாகும்நிலை கூடாது. பலிக்குப் பலி ஏன் வாங்கு கிறார்கள்? நீதி கிடைக்காது ஆகையால் நாமே தண்டனை கொடுத்து விட வேண்டும் என்று. நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது என்று குற்றவாளிகள் லட்சக் கணக்கில் தப்பித்து விடுகின்றனர். வெளி விடும் கலைகளில் கை தெரிந்தவர்களின் கைங்கரியம் பற்றி என்ன சொல்ல?
Rate this:
Share this comment
Cancel
afu - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூலை-201623:43:24 IST Report Abuse
afu இந்திய சினிமா தணிக்கை குழுவே இரத்தம் கொலை கொள்ளை போன்ற சமூகத்தை கெடுக்கும் , அதுவும் முக்கியமாக இன்றைய இளைஞர்களை, மற்றும் பெண்களை கெடுக்கும் குப்பை படங்களை அனுமதிக்காமல் இருந்தால் நல்லது. பணம் சம்பாதிப்பதட்காக இது போன்ற குப்பை படங்களை எடுத்து இன்றைய சமூகத்தை கெடுக்கும் இந்த சினிமா . இது போன்ற சினிமா படங்களை காணும் இளைஞன் தானும் ஒரு ஹீரோ என்று நினைத்து காதல் கத்தரிக்காய் போன்ற தேவை இல்லாத செயல்களில் ஈடுபட்டு தானும் வாழாமல் பெண்ணையும் வாழ விடாமல் நாசமாய் போகிறான். ஹீரோ நூறு படத்தில் நூறு பெண்ணை காதலிப்பான். அது நடைமுறை வாழ்வில் சாத்தியமா என்ன? இளைனனே முதலில் சாம்பாதித்து உன்னை நீ நிலை நிறுத்து சமூகத்தில் நல்ல பண்புடனும் நல்ல பேர் உடனும் வாழ்ந்து பார். அப்புறம் பார் ஆயிரம் அனுஸ்கா, ஆயிரம் நயன்தாரா உன் பின்னால் வருவார்கள் நீ அவர்களை தேடி போக வேண்டியது இல்லை. திருந்துங்கப்பா நாசமாய் போகாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
afu - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூலை-201623:31:49 IST Report Abuse
afu இது என்ன தமிழ் நாட்டில் உருவான புயல் ஆந்திராவை தாக்கியது போல . இப்போ தான் சென்னையில் ஒரு பெண் உடைய கொலை முடிவுக்கு வந்த வேளையில் ஆந்திராவில் தொடங்கி உள்ளது . என்னடா லவ் பண்றீங்க. உங்களை பிடிக்காத பெண்ணை கட்டாயப்படுத்தி காதலித்து என்னடா பயன். அப்படி பிடிக்காத பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்வதால் உன்னால் நிம்மதியாக வாழ முடியுமா. தப்பு இந்த பொண்ணுங்க மேலயும் இருக்கு ஒரு வருடம் பின்னால சுத்துனானாம் , ஒரு வருடம் இந்த பெண் என்ன செய்து கொண்டு இருந்தார். பிடிக்கவில்லை என்றால் நேராக போலீஸ் இடம் சொல்ல வேண்டியது தானே. இந்த கேடு கேட்ட பொறுக்கிகள் தானும் வாழாமல் அந்த பெண்ணையும் வாழ விடாமல் கொன்று விட்டு ஜெயில் போவதால் என்ன பயன். இந்த பொறுக்கிகளை விஷ ஊசி போட்டு கொல்லுங்கப்பா. தினமும் இது போல செய்தி படிக்கும் நம்மை சைக்கோ ஆக்கி விடுவார்கள் போல இருக்கு. சகோதரர்களே நீங்கள் விரும்பும் பெண்ணை DISLIKE செய்து விட்டு , உங்களை விரும்பும் பெண்ணை LIKE செய்யுங்கப்பா. பெண்களே ஆண்களை உங்கள் பின்னால் சுற்ற விடாமல் உடனே போலீஸ் வசம் பிடித்து கொடுக்கவும் அவ்வாறு செய்வதால் நீங்களும் உயிரோடு இருக்கலாம். ஆண்களும் கொஞ்சம் ஜெயில் சோறு , கொஞ்சம் பூட்ஸ் காலால் மிதி, கொஞ்சம் லத்தி அடி வாங்கி விட்டு திருந்தி வாழ முயட்சிப்பான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X