புதுடில்லி:ஆண்டு வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் ஏமாற்றும், என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும், அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும், பதிவு செய்யப்பட்ட, 30 லட்சம் அரசு சார்பற்ற அமைப்புகள் செயல்படுகின்றன. இதில், 10 சதவீத அமைப்புகள் மட்டுமே, ஆண்டு தோறும், வரவு செலவு கணக்குகளை முறை யாக தாக்கல் செய்கின்றன.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெறும் இதுபோன்ற அமைப்புகள், அவற்றை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக புகார்கள் உள்ளன.
சில அமைப்புகள், மதமாற்ற செயல்களுக்கும், வேறு சில அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான பிரசாரங்களுக்கும் வெளிநாட்டு நிதியை பயன்படுத்துவதாகவும்
குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
வெளிநாட்டு
நன்கொடை கட்டுப்பாட்டு சட்டத் தின் கீழ், இந்த அமைப்புகள் பதிவு செய்து
சான்றிதழ் பெற வேண்டும். ஆண்டு கணக்கை தாக்கல் செய்யாத, 15 ஆயிரம்
அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ், கடந்த இரண்டு ஆண்டுகளில்
ரத்து செய்யப் பட்டுள்ளது.
இதற்கிடையே, 10 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நன்கொடை அல்லது ஒரு கோடி ரூபாய் மத்திய அரசின் மானியம் பெறும் அமைப்புகள், 'லோக் பால்' எனப்படும், ஊழல் தடுப்பு அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும் என, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'ஆண்டு வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாத, அரசு சார்பற்ற அமைப்பு களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சகம்
தெரிவித்துள் ளது; இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அபராதம் எவ்வளவு? அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
* அரசு சார்பற்ற அமைப்புகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், 31ம் தேதிக்குள், முந்தைய நிதியாண்டுக்கான வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்
* தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், வரவு செலவு
கணக்கு தாக்கல் செய்யாவிட்டால்,
அந்த அமைப்புகள் பெற்ற மொத்த வெளிநாட்டு நன்கொடையில், 10 சதவீதம் அல்லது,
10 லட்சம்ரூபாய், இதில் எது குறைவோ அது அபராதமாக வசூலிக்கப்படும்
* ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுக்குள், கணக்கு தாக்கல் செய்யாத அமைப்புகளுக்கு, அவை பெற்ற வெளிநாட்டு நன்கொடையில், 5 சதவீதம் அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
* ஆறு மாதம் முதல், ஓராண்டு வரை கணக்கு தராத அமைப்புகளுக்கு, அவை பெற்ற நன்கொடையில், 4 சதவீதம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
* மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை, கணக்கு தாக்கல் செய்ய தவறும் அமைப்புகள், அவை பெற்ற நன்கொடையில், 3 சதவீதம் அல்லது, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்
* மூன்று மாதம் வரை கணக்கு தராத அமைப்புகளுக்கு, நன்கொடையில், 2 சதவீதம் அல்லது, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கோடிக் கணக்கில் குவியும் நன்கொடைஉள்துறை அமைச்சக புள்ளி விவரங்களின்படி, அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு கிடைத்த வெளிநாட்டு நன்கொடைகள் விவரம்:ஆண்டு - அமைப்புகள் எண்ணிக்கை - பெற்ற நன்கொடை (ரூபாய் கோடியில்)2011-12 - 22,747 - 11,5582012-13 - 20,497 - 11,5272013-14 - 17,616 - 13,051
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (17)
Reply
Reply
Reply