மலேசியாவில் ரூ.50 ஆயிரத்திற்கு விலை போகும் தமிழர்கள் 8 ஆயிரம் பேர் தவிப்பு Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மலேசியாவில் ரூ.50 ஆயிரத்திற்கு விலை போகும்
தமிழர்கள் 8 ஆயிரம் பேர் தவிப்பு

மதுரை:போலி முகவர்களின் ஆசை வார்த் தைகள்... கைநிறைய கண்முன் வந்து போகும் கரன்சி கட்டுகள்... இதில் ஈர்க்கப்பட்ட வர்களை 'சிறைபிடித்து' விமானத்தில் பறக்கவிட்டு, கடைசியில் அதலபாதாளத்தில் தள்ளி தவிக்க வைத்து விடுகிறது குடும்பச்சூழல்.

 மலேசியாவில் ரூ.50 ஆயிரத்திற்கு விலை போகும் தமிழர்கள்  8 ஆயிரம் பேர் தவிப்பு

மலேசியாவில் தற்போது 8 ஆயிரம் தமிழர்கள் பழைய இரும்பு உலோக கடைகளில் அடிமை கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் மலேசியா செல்ல முகவர்களிடம் ரூ.1.50 லட்சம் பணம் கட்டியிருக்கிறார்கள்.

கடும் வேலைப்பளுவை சமாளிக்க முடியாமல் மீண்டும் இந்தியா செல்ல விரும்பினால், கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் 'கப்பம்' கட்டி னால்தான் திரும்ப முடியும் என, மலேசி யாவில் பாதிக்கப்பட்டு வெளியேறிய தொழிலா ளர்கள் கூறுகின்றனர்.

கைமாறும் தொழிலாளர்கள்: இதுகுறித்து மதுரை மீட்பு அறக்கட்டளை செயலாளர் எஸ்.சிவசோமசுந்தரம் கூறியதாவது:

எனக்கு தெரிந்து மலேசியாவில் அடிமைகளாக

20 ஆயிரம் இந்தியர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக விதவைகள், ஆதரவற்றவர்கள், ஆண்கள் இல்லாத குடும்பத்து பெண்கள் என ஆதரவற்ற வர்கள் தான் அதிகம் வெளிநாடு செல்கின்றனர். முகவர்களின் ஆசைவார்த்தைகள் தான் இவர்களை வெளிநாடு செல்லத் துாண்டுகிறது.

நம் நாட்டில் முகவர்களுக்கானசட்டம் முறையாக செயல்படவில்லை. அதனால் போலி முகவர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது.வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஒருவர் ஐந்து நபர்களின் கைகளுக்கு மாறுகிறார்.

கடைசியாக யாரிடம் செல்கிறாரோ அவரிட மிருந்து உரிமையாளர்கள் விலை கொடுத்து வாங்குகின்றனர். குறைந்தது ரூ.50 ஆயிரம் வரை தமிழர்கள் உட்பட இந்தியர்கள் விலை போகின்றனர். இவர்கள் குறைந்தது 15 மணி நேரம் வேலை பார்த்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

முகவர்களின் முகவரி:முகவர்களுக்கு, சென்னை யில் உள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகத்தில் தான் உரிமம் வழங்கப்படுகிறது.

வெளிநாடு செல்ல முகவரை அணுகிய பின், இந்த அலுவலகத்தில் நம் முகவர் உரிமம் பெற்றவரா என்பதை அறிந்து, அவர்களின் முகவரியை அறிய வேண்டும். உரிமம் பெற்றவர்களின்பட்டியலை இந்த அலுவலக இணையதளத்திலும் பார்க்கலாம்.

இப்படி, உரிமம் பெற்ற முகவர்கள் தங்களுக்கு கீழ் உரிமம் இல்லாத நபர்களை முகவர்களாக வைத்துள்ளனர். இதுபோல் துணை முகவர்கள் வைத்துக்கொள்ள சட்டத்தில் இடம் இல்லை.

Advertisement

சட்டப்படி வெளிநாடு செல்ல முகவரிடம் ரூ.20 ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதும்.

மீட்பு புள்ளிவிபரம்:நம் நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு வேலை குறித்து விழிப்புணர்வு வர வேண்டும். சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆண் குழந்தை பிறந்தாலே வெளிநாடு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். ஓட்டல் சர்வர், முடி திருத்துவோர், கப்பல் உடைத்தல் உள்ளிட்ட வேலைகளுக்குதான் அதிக தொழிலாளர்கள் வெளிநாடு செல்கின்றனர்.வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலர் தவறாக பயன்படுத்தப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இவர்களை மீட்க எத்தனை பேர் வெளிநாடு சென்றனர், திரும்பினர் என்ற புள்ளிவிபரங் களை அரசு சேகரிக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களில் வெளிநாடு சென்றவர்களின் விபரங்களை கேட்டு பெற்றால், எளிதில் புள்ளி விபரங்களை பெற்றுவிடலாம்.
இவ்வாறு கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samy - CBe,இந்தியா
08-ஜூலை-201617:55:03 IST Report Abuse

Samyமலேசியாவுக்கு அழைத்து செல்லும் தமிழர்களை ஏமாற்றுவது பெரும்பாலும் மலேசியாவாழ் தமிழர்களே. லட்சக் கணக்கான தமிழர்கள் ஏமாற்றப் பட்டு படும் அவதிகளைக் காணும்பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கும். 2 ஆண்டுகள் அங்கு வாழ்ந்தபோது ஏமாற்றப்பட்ட தமிழர்கள் படும் அவதிகளைக் கண்டு கண்ணீர் மட்டும்தான் விட முடிந்தது.

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-ஜூலை-201614:16:22 IST Report Abuse

Sanny மலேசியாவில் தொழில் வருமானம் இல்லாது மலேசியர்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் 100 ரிங்கிட் சம்பளத்துக்கு, இந்தியாவிலிருந்து அடிமாட்டு விலைக்கு மனிதர்களை கொண்டுபோய் 25, 30 ரிங்கிட்டுக்கு வேலை வாங்குகிறார்கள். மலேசியாவில் லஞ்சம் தமிழ்நாட்டை விட அதிகம் தலை விரித்து ஆடுவதால் மலேசிய அரசுக்கு உண்மை தகவல் தெரிவதில்லை.

Rate this:
methavi - Kosu pattu,இந்தியா
04-ஜூலை-201613:24:00 IST Report Abuse

methaviஉணவுண்டு உடலை வளர்க்க நினைக்கும் நமக்கு கல்வி கற்று மூளையை வளர்க்க தவறியதன் விளைவுதான் இது.

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X