சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு வரும் 18 ம் தேதி வரை ரிமாண்ட்

Added : ஜூலை 04, 2016 | கருத்துகள் (33)
Advertisement
சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு வரும் 18 ம் தேதி வரை ரிமாண்ட்

சென்னை: சுவாதியை வெட்டி கொன்ற கொலையாளி ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட் கோபிநாத் நேரில் விசாரணை நடத்தினார். அவனை வரும் 18 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கடந்த மாதம் கடைசி வாரத்தில் இன்போசிஸ் ஊழியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலையை செய்தது யார் என்ற மர்மம் நீடித்த நிலையில் போலீசார் செங்கோட்டையில் வீட்டீல் பதுங்கிஇருந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.

இந்நேரத்தில் அவன் கழுத்தை தானே அறுத்து கொண்டதால் போலீசார் அவனை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் சென்னையில் வைத்து அவனிடம் விசாரணை நடத்த பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டடான்.

இன்று ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முறைப்படி அவன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும். இவன் சிகிச்சையில் இருப்பதால் எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். தொடர்ந்து அவனை நீதிமன்ற காவலில் வரும் 18 ம் தேதி வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் உடல் நலம் தேறியவுடன் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவான்.


இதற்கிடையில் ராம்குமாரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அரசு தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும்.


ராம்குமார் உடல்நிலை நலமாக இருப்பதாகவும், அவன் பேசக்கூடிய அளவில் தகுதி உடையவனாக இருப்பதாகவும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நசீர் அகம்மது கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilan - RAMANATHAPURAM,இந்தியா
05-ஜூலை-201601:44:46 IST Report Abuse
tamilan எல்லோரும் கொஞ்சம் வைட் பண்ணுங்க தீர விசாரிக்கட்டும், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கமெண்ட் BODAATHEENGA
Rate this:
Share this comment
Cancel
நிலா - மதுரை,இந்தியா
05-ஜூலை-201600:48:42 IST Report Abuse
நிலா இவன் கதை ஏதோ முன்விரோதம் மாதிரி அல்லது குடும்ப சொத்து பிரச்சனை கொண்டு இவன் பலிகடா ஆக்கப்பட்டது போல இருக்கிறது. அதற்கு ஒரு face book whatsapp கதையை ஜோடித்து தயார் செய்த மாதிரி இருக்கிறது. அவன் செய்தது மிகப்பெரிய தவறு தான் யாரோ இவனுக்கு பின் இருப்பது போல் தெரிகிறது. அவனுக்கு தன் நிலை தெரியாதவன் போல் இல்லை. அழகு படிப்பு வேலை இல்லை அவன் எப்படி இந்த பெண்ணின் மீதுகாதல் கொள்வான். தீர விசாரித்தால் உண்மை வெளிப்படும் ஆனால் அந்த உண்மை வெளியே வராமல் இருக்க பல சதிகள் நடப்பது போல தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
ramachandran n - madurai,இந்தியா
04-ஜூலை-201620:13:25 IST Report Abuse
ramachandran n இதையும் படம் எடுத்து காசு பார்ப்பவர்களிடம் ஒன்றை மட்டும் சொல்கிறேன். நீங்கள் எடுத்த பல படங்களின் தாக்கம் தான் இந்த கொடுரத்திற்கு முக்கிய காரணம். பொறுக்கி பணக்கரைப்பொண்ணை காதலிப்பது போலவும் ஏழை மாணவன் வன்முறையை கையில் எடுப்பது போன்றதும் தயவு செய்து மாண்புமிகு கோர்ட் இதை எல்லாம் கவனிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X