தேவதானப்பட்டி: வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாததால் ஜெயமங்கலத்தில் உளுந்து வயலில் கூடுதல் மருந்து தெளித்ததால் செடிகள் காய்ந்து வருகின்றன. பெரியகுளம் தாலுகாவில், வடுகபட்டி, மேல்மங்லம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. கண்மாய், குளம் மற்றும் கிணறுகள் நீர் ஆதாரமாக உள்ளன. வேளாண் அதிகாரிகள் களப்பணிக்கு நேரிடையாக வந்து பயிர்களின் நிலையினை அறிந்து பாதிப்பு இருந்தால் என்ன மாதிரியான உரம், பூச்சி மருந்து வழங்கலாம் என பரிந்துரை செய்வார்கள். இந்த நடவடிக்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு புயனுள்ளதாக இருக்கும். ஆனால் சமீப காலமாக தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் சிலர் களப்பணிக்கு வருவது இல்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. பயிர்களில் நோய் தாக்கம்இதனால் ஜெயமங்கலத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் நெல்லில் கருகல், சங்கரமூர்த்திபட்டியில் மல்லிகை செடியில் வேர்ப்புழு, முருங்கையில் புழு தாக்குதல் இப்படி பல்வேறு நோய் தாக்குதல்களால் பயிர்கள் பாதித்துவருகின்றன. நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகள் விவசாயிகளுக்கு இல்லை. இதனால் விவசாயிகள் மருந்து கடைகளில் நோயின் தாக்குதலை கூறி மருந்து கடைக்காரர் கொடுக்கின்ற மருந்தை தெளித்து வருகின்றனர்.அதிக உரமிட்டதால் பாதிப்புஇதே போன்று ெஜயமங்கலத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூ பிடித்து பிஞ்சு விடும் நிலையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் அவர்களாகவே யூரியா கரைசலை தெளித்துள்ளனர். தேவைக்கு அதிகமாக கூடுதல் மருந்து தெளித்ததால் பலன் தரும் நிலையில் உளுந்து செடிகள் காய்ந்து வருகின்றன. விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க தேவையான ஆலோசனைகளை வழங்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் வயல்வெளிகளை நேரடியாக ஆய்வு செய்ய முன்வர வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE