மத்திய அமைச்சரவையில் மாற்றம் | Dinamalar

மத்திய அமைச்சரவையில் மாற்றம்

Updated : ஜூலை 05, 2016 | Added : ஜூலை 05, 2016 | கருத்துகள் (4)
Advertisement
மத்திய அமைச்சரவையில் மாற்றம்

புதுடில்லி: மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. அவர் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் என்பது இது 2வது முறையாகும். மேலும் இன்றயை மாற்றத்தில் புதிதாக 19 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இப்போதைய மாற்றத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடியினர் , சிறுபான்மையினர் மற்றும் தலித் இனத்தவர்களுக்கு இன்றைய மாற்றத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள் விபரம்:
மத்திய இணை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜாவடேகர் மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

மற்றவர்கள்,
01.பகன் சிங் குலஸ்தே(ம.பி.,) வாஜ்பாய் அரசில் இணையமைச்சராக பதவி வகித்தவர்.
02.எஸ் எஸ் அலுவாலியா(மேற்கு வங்கம்) பா.ஜ., தேசிய துணைத்தலைவராக உள்ளார்.
03.ரமேஷ் சந்தப்பா ஜிகஜினாக்கி(கர்நாடகம்)
04.விஜய் கோயல்(டில்லி பா.ஜ., தலைவர்) இவர் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
05.ராம்தாஸ் அத்வாலே(மகாராஷ்டிரா) குடியரசு கட்சி தலைவர். இவர் பதவியேற்கும் போது தனது பெயரை உச்சரிக்க மறந்துவிட்டார். பின்னர் ஜனாதிபதி நினைவுபடுத்தியதை தொடர்ந்து மீண்டும் பதவியேற்றார்.
06.ராஜன் கொஹெய்ன்(அசாம்) மத்திய அமைச்சராக இருந்த சர்பானந்த் சோனாவால் அசாம் முதல்வராகியதை தொடர்ந்து அவரது இடத்தை நிரப்பியுள்ளார்.
07.அனில் மாதவ் தவே(ம.பி.,)
08. பர்ஷோத்தம் ரூபாலா. இவர் குஜராத் மாநில தலைவர். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்.
09.எம்.ஜே. அக்பர் மூத்த பத்திரிகையாளர்.
10.அர்ஜூன் ராம் மேகவால் இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்வர். லோக்சபாவில் தலைமை கொறடாவாக உள்ளார். நீதிநெறிக்குழு தலைவராக உள்ளார்.
11.ஜஸ்வந்த் சின்ஹ் பகோபர் குஜராத் சேர்ந்தவர். தாகோத் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்.
12.மகேந்திரநாத் பாண்டே உ.பி., மாநிலம் சந்தோலி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்.
13. அஜய் டாம்டா (உத்தர்காண்ட்)
14. கிருஷ்ணராஜ் உ.பி., மாநிலம் ஷாஜகான்பூர் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டவர்.
15.மன்சுக் மாண்டிவியா(குஜராத்)
16. அனுப்பிரியா படேல்(உ.பி.,) இவர் அப்னா தள் கட்சியை சேர்ந்தவர்.
17.சி.ஆர். சவுத்ரி(ராஜஸ்தான்)
18.பி.பி. சவுத்ரி(ராஜஸ்தான்)
19.சுபாஷ் பாம்ரே. இவர் மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் தேர்வு செய்யப்பட்டவர். புற்றுநோய் சிகிச்சை நிபுணர்.

இவர்கள் அனைவருக்கும் மத்திய இணையமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இது மாற்றமல்ல ! விரிவாக்கம்: இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவில்லை. விரிவாக்கம் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
05-ஜூலை-201615:54:34 IST Report Abuse
மலரின் மகள் விரிவாக்கம் என்பது அனைத்து பகுதியிலும் நடப்பது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்தால் அது வீக்கம். வடக்கிலிருந்து வட மேற்காக வீங்கி இருக்கிறது என்பதுதான் கண் கூடு.
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
05-ஜூலை-201612:43:51 IST Report Abuse
Raj Pu தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் போலவே சிறுபான்மையினர் தலித் மக்கள் ஓட்டுக்காக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது ஒரு வகை இடஒதுக்கீடு
Rate this:
Share this comment
Cancel
JOY - Chennai,இந்தியா
05-ஜூலை-201611:23:51 IST Report Abuse
JOY அந்த 4 மாநிலத்தில் தேர்தல் வருகிறது அதை மனதில் வைத்து கொண்டு என்று உண்மை சொன்னால் தான் என்ன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X