மத்திய அமைச்சரவையில் 19 பேர் Dinamalar
பதிவு செய்த நாள் :
மத்திய அமைச்சரவையில் 19 பேர்

புதுடில்லி: மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டது. அவர் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றம் என்பது இது 2 வது முறையாகும். மேலும் இன்றயை மாற்றத்தில் புதிதாக 19 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் 19 பேர்


மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இப்போதைய மாற்றத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடியினர் , சிறுபான்மையினர்மற்றும் தலித் இனத்தவர்களுக்கு இன்றைய மாற்றத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இது மாற்றமல்ல ! விரிவாக்கம்: இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவில்லை. விரிவாக்கம் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்றார். அலுவாலியா, சவுத்ரி, அனுப்பிரியா பட்டேல், விஜய்கோயல், அக்பர் , அனில்

Advertisement


மாதவ், புருசோத்தம் ருபூல்லா, பகத்சிங், அர்ஜூன் ராம், பிகே சவுத்ரி , ஜஸ்வந்த்சிங் பபோர். அனில்தேசாய், ராம்தாஸ் அத்வாலே, விஜய் கோயல், பகேன் குலஸ்தே , மகேந்திரநாத் பாண்டே , அர்ஜூன்மெக்வால், ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பிரகாஷ் ஜவ்டேகர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.புதிய மந்திரிகளில் ரமேஷ் ஜிகஜினகி, பகன்சிங், கிருஷ்ணராஜ், அர்ஜுன் ராம் மெக்வால், ராம்தாஸ் அதவாலே, அஜய் தம்தா ஆகிய 5 பேரும் தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள். பி.பி.சவுத்திரி, சி.ஆர்.சவுத்திரி இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாட் இன மூத்த தலைவர்களாவார்கள். இவர்களை மந்திரிசபையில் சேர்த்து இருப்பதன் மூலம் ஜாட் இன மக்களை பிரதமர் மோடி திருப்திபடுத்தி உள்ளார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் ராம்ராவ் பம்ரி மிகச் சிறந்த புற்றுநோய் நிபுணர் ஆவார். இவர் ஆர்.எஸ்.எஸ். பரிந்துரையின் பேரில் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. மத்திய மந்திரி சபையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பிரதமர் வாய்ப்பு கொடுத்துள்ளார். படேல் இனத்தவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த இன மூத்த தலைவர்களில் ஒருவரான புருஷோத்தம் ரூபலாவை மந்திரிசபையில் சேர்த்துள்ளனர்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சர்பானந்தா முதல்-மந்திரி ஆகி விட்டதால், அசாமைச் சேர்ந்த ராஜன் கோகையனுக்கு மந்திரி சபையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அசாமில் இருந்து தொடர்ச்சியாக 4-வது முறையாக எம்.பி.யாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியை மேம்படுத்தவும், பா.ஜ.க.வை வலுப்படுத்தவும் இந்த மந்திரிசபை மாற்றம் கை கொடுக்கும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். இணைமந்திரியாக இருந்த பிரகாஷ் ஜவடேகருக்கு இன்று காபினெட் அந்தஸ்துடன் கூடிய மந்திரி பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-ஜூலை-201619:38:56 IST Report Abuse

Loganathan Kuttuvaசட்ட சபையில் எந்த திராவிட கட்சிகளும் கூட்டணி கட்சியில் இருப்பவர்களுக்கு மந்திரி பதவி கொடுப்பதில்லை.

Rate this:
KingsMan - CHENNAI,இந்தியா
05-ஜூலை-201619:07:29 IST Report Abuse

KingsManலோக்சபா தேர்தலில் தமிழ் நாட்டு மக்கள், தேசிய கட்சிகளை ஆதரிக்க வேண்டும்........

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
05-ஜூலை-201617:01:30 IST Report Abuse

Endrum Indianஅந்த 5 பேர் இது வரை எந்த செய்தியிலும் வந்தத்தாக கூடத் தெரியவில்லை.

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
05-ஜூலை-201617:37:00 IST Report Abuse

Barathanஇனி இவர்கள் பெயர் செய்தியில் வரும்...

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X